share market today: கடந்த 2021-22 நிதியாண்டில் மும்பைப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.59.75 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சென்செக்ஸ் புள்ளிகளும் 18சதவீதம் உயர்ந்தன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021-22 நிதியாண்டில் மும்பைப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.59.75 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சென்செக்ஸ் புள்ளிகளும் 18சதவீதம் உயர்ந்தன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021-22 நிதியாண்டு

2021-22 நிதியாண்டில் மும்பைபங்குச்சந்தையில் சென்செக்ஸ் 9,059 புள்ளிகள் ஈட்டியது, அதாவது 18.29 சதவீத வளர்ச்சி பெற்றது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.59 லட்சத்து 75 ஆயிரத்து 689 கோடியாக அதிகரித்துள்ளது. 

கடந்த நிதியாண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக பங்குச்சந்தையில் பரிவர்த்தனையான பங்குகள் மதிப்பு மட்டும் ரூ.2 கோடியே 64 லட்சத்து 6ஆயித்து 501 கோடியாகும். 

அதிகபட்ச உயர்வு

மும்பைப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு இதுவரைஇல்லாத வகையில் 2022 ஜனவரி 17ம் தேதி ரூ.280 லட்சம் கோடியாக அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

நிறுவனங்கள் மதிப்பு

மும்பைப் பங்குச்சந்தையில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.17 லட்சத்து 81ஆயிரத்து 834 கோடியாக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.13லட்சத்து 83ஆயிரத்து ஒரு கோடியும், ஹெச்டிஎப்சி வங்கியின் சொத்துமதிப்பு ரூ.8 லட்சத்து 15ஆயிரத்து 166 கோடியும், இன்போசிஸ் நிறுவனத்தின் சொத்துமதிப்பு ரூ.8 லட்சத்து 2ஆயிரத்து 309 கோடியும், ஐசிஐசிஐ வங்கியின் சொத்து மதிப்பு ரூ.5 லட்சத்து7ஆயிரத்து 434 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

சாதகமான சூழல்

ரிலேகிரே புரோக்கிங் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார ஆய்வாளர் அஜித் மிஸ்ரா கூறுகையில் “ கடந்த நிதியாண்டு முழுவதும் முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழல் நிலவியதுதான் பங்குச்சந்தை உயர்வதற்கு காரணமாக இருந்தது.

கொரோனா அலை ஓய்ந்தபின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் பொருளாதாரம் வலிமையாக மீண்டதும், வருமானம் ஈட்டியதும்தான் பங்குச்சந்தை உயரவும் காரணம். ஆனால் கடைசிக் காலாண்டில்தான் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. குறிப்பாக ரஷ்யா உக்ரைன் இடையிலான போர், அரசியல்பதற்றங்கள் ப ங்குச்சந்தையில் ஊசலாட்டத்தை உண்டாக்கின.

ஏற்ற மான ஆண்டு

மற்றவகையில் மத்திய அரசிடம் இருந்தும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க வட்டியைக் குறைத்து வைத்திருந்த ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையும் பங்குச்சந்தை வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தன. ஒட்டுமொத்தத்தில் கடந்த நிதியாண்டு பங்குச்சந்தையில் ஏற்றமான ஆண்டு” எனத் தெரிவித்தார்