அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தபோவதாக வெளியான தகவலை தொடர்ந்து, உலக அளவில் , வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் எதிரொலியாக வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான இன்று, வர்த்தக நேர தொடக்கத்திலேயே சரிவுடன் தொடங்கியது.
வர்த்தக தொடக்கத்தில் 288 புள்ளியுடன் சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ், முடிவில், 439 புள்ளிகள் சரிவடைந்து காணப்பட்டது.
அதன் படி, தேசிய பங்கு சந்தை குறியீடு நிப்டி 135 புள்ளிகள் குறைந்து 8,573 புள்ளியிலும், மும்பை பங்கு சந்தை குறியீடு சென்செக்ஸ் 439 புள்ளிகள் குறைந்து, 27,643 புள்ளியிலும் நிலை பெற்றது.
இன்றைய பங்கு வர்த்தகத்தில், பெரும்பாலான நிறுவன பங்குகள் இழப்பை சந்தித்தன .
லாபத்துடன் முடிவுற்ற நிறுவன பங்குகள் :
ONGC, INFY, MAARUTHI, CIPLA HERO MOTO CORP உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்துடன் முடிவுற்றன
இழப்பை சந்தித்த நிறுவன பங்குகள் :
BANK OF BARODA, ADANI PORTS, IDEA உள்ளிட்ட நிறுவன பங்குகள் இழப்பை சந்தித்தன.
