சர்வதேச காரணிகள், ரஷ்யா-உக்ரைன் பதற்றம் ஆகியவற்றால் மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் கரடியின் ஆதிக்கம் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் நீடித்ததால் சரிவுடன் வர்த்தகம் முடிந்தது.

சர்வதேச காரணிகள், ரஷ்யா-உக்ரைன் பதற்றம் ஆகியவற்றால் மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் கரடியின் ஆதிக்கம் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் நீடித்ததால் சரிவுடன் வர்த்தகம் முடிந்தது.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் பதற்றம், அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை கடுமையாக உயர்த்த மார்ச் மாதம் வாய்ப்பிருக்கிறது என்ற அச்சம், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணிகளால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ஆர்வத்துடன் முதலீடு செய்யவில்லை.

இதனால் இன்றுகாலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சரிவு காணப்பட்டது, 250 புள்ளிகள் சரிந்தநிலையில் தொடங்கிய வர்த்தகம் 500 புள்ளிகள்வரை வீழச்ச்சி கண்டனது, நிப்டியும் சரிந்தது. இதனால் சந்தையில் ஊசலாட்டமான போக்கே காணப்பட்டது.

உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவதாக எழுந்த செய்திக்குப்பினும் சந்தையில் எந்த மாற்றமும் இல்லை. சரிவை நோக்கியே வர்த்தகம் சென்றது.

மும்பைப் பங்குச்சந்தையில் வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 149 புள்ளிகள் சரிந்து 57,683 புள்ளிகளில் முடிந்தது, வர்த்தகத்தின் இடையே 976 புள்ளிகள்வரை சரிந்தது. தேசியப்பங்கு்சந்தையான நிப்டியில் 70 புள்ளிகள் சரிந்து 17,207 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பைப் பங்குச்சந்தையில் விப்ரோ, இன்போசிஸ், பவர்கிரிட், ஸ்ரீசிமெண்ட், நெஸ்டில் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி ஆகிய பங்குகள் லாபமடைந்தன. ஹிண்டால்கோ, யுபிஎல், சன் ஃபார்மா, அதானி போர்ட்ஸ், டிவிஸ் லேப்ஸ், டிசிஎஸ் பங்குகள் சரிந்தன