Share market today:பங்குச்சந்தையில் இன்று காலை சரிவுடன் தொடங்கிய வர்த்தகம் மாலை வரை தொடரந்து. மும்பை பங்குசந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் மோமான வீழ்ச்சியைச் சந்தித்து சரிவுடன் முடிந்தன.

பங்குச்சந்தையில் இன்று காலை சரிவுடன் தொடங்கிய வர்த்தகம் மாலை வரை தொடரந்து. மும்பை பங்குசந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் மோமான வீழ்ச்சியைச் சந்தித்து சரிவுடன் முடிந்தன.

காரணம் இதுதான்

1. உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்திருப்பது, ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், கனடா விதித்த பொருளாதாரத் தடை,
2. பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் 130 டாலர்களுக்கும் அதிகமாக உயரந்து, கடந்த 2008ம் ஆண்டில் இருந்த விலைக்கு வந்தது. 
3. புவிசார் அரசியல் சூழல் மோசமாக இருந்ததால், முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை
4. உலகளாவிய நிதிப் பிரச்சினைகளால், அன்னிய நேரடி முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையிலிருந்து முதலீட்டை திரும்பப் பெறுவது அதிகரித்து. இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்தால் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் அச்சத்தாலும் முதலீட்டை திரும்பப் பெற்றனர்
5. ள்ளனர். இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதால், முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை. 
6. இந்தியாவில் உள்ள பொருளாதாரச் சூழல் மீது முதலீட்டார்கள் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். இனிவரும் நாட்களில் பெட்ரோல், டீசல் உயரும், பணவீக்கம் அதிகரிக்கும்போது, முதலீட்டுப் பொருட்கள், கட்டமைப்பு வசதி, ரியல் எஸ்டேட் , வங்கித்துறை எவ்வாறு செயல்படும் என்ற சிந்தனையால், முதலீட்டை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதால், முதலீட்டை திரும்பப் பெற்றனர்

வர்த்தகம் தொடங்கியதும்,மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1400 புள்ளிகள் மளமளவெனச் சரிந்தது, நிப்டி 15,900 புள்ளிகளுக்கும் கீழ் வந்தது. அதன்பின் தொடர்ந்து மும்பைப் பங்குச்சந்தையில் சரிவு தொடர்ந்தது.

மும்பைப் பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் முடிவில், சென்செக்ஸ் 1491 புள்ளிகள் சரிந்து, 52,919 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 382 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 15,863 புள்ளிகளில் முடிந்தது

உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றம் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட போர் காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் இந்திய முதலீட்டாளர்களுக்கு ரூ.29லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 
இன்று ஒருநாளில் 1400 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

உலகச்சந்தைகளான ஜப்பான், பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பங்குச்சந்தைகள் யாவும் மைனஸ் அளவிலேயே வர்த்தகத்தை முடித்தன.

மும்பைப் பங்குச்சந்தையில் டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, இன்போசிஸ், ஐடிசி, ஹெச்சிஎல்,ஏர்டெல், ஹிண்டால்கோ, கோல் இந்தியா, யுபிஎல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபம் ஈட்டின. ஜே.கே.சிமென்ட், ஸ்பைஸ் ஜெட், பிராமல் என்டர்பிரைசஸ், சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி, கோத்ரேஜ் நுகர்வோர் பொருட்கள்,மாருதி, இன்டஸ்இன்ட் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன

 ரூபாய் வரலாற்று வீழ்ச்சி

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்ட பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையிலிருந்து முதலீட்டை எடுத்து பத்திரப்படுத்தினர். இதனால் அன்னியச் செலாவணி பரிமாற்றச் சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்து. இதனால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவாக 84 பைசா சரிந்து, ரூ.77.01 ஆகக் குறைந்தது. 
இன்று காலை அன்னிய செலாவணி பரிமாற்றச்ச ந்தை தொடங்கியபோது ரூ.76.85ஆகக் தொடங்கியநிலையில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு அன்னியசெலவானிச் சந்தையிலும் எதிரொலித்து ஒரு டாலருக்கு நிகரானமதிப்பு ரூ.77.01 ஆகக் குறைந்தது.