Share market today: ரஷ்யா உக்ரைன் போர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறுகாணாத வகையில் உயர்வு, ரஷ்யாமீதான தடை இறுக்கம் ஆகியவற்றால் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது.
ரஷ்யா உக்ரைன் போர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறுகாணாத வகையில் உயர்வு, ரஷ்யாமீதான தடை இறுக்கம் ஆகியவற்றால் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது.
உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்திருப்பது, ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், கனடா விதித்த பொருளாதாரத் தடை, ஐரோப்பிய சந்தையில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு வரும் என்று எண்ணி, பிரண்ட் கச்சா எண்ணெய் 130 டாலர்களுக்கும் அதிகமாக உயரந்தது. ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் பெரும் அச்சமடைந்தனர்

கச்சா எண்ணெய் விலை உயர்வு
அதுமட்டுமல்லாமல் அன்னிய நேரடி முதலீட்டாளர்கள் கடந்த 2 மாதங்களாக அதிகமான அளவு பங்குச்சந்தையிலிருந்து முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதால், முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை.
வர்த்தகம் இன்று காலை தொடங்குவதற்குமுன்பே சென்செக்ஸ் 600 புள்ளிகளும், நிப்டி 16,060 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது.
வர்த்தகம் தொடங்கியதும்,மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1400 புள்ளிகள் மளமளவெனச் சரிந்தது, நிப்டி 15,900 புள்ளிகளுக்கும் கீழ் வந்தது. அதன்பின் தொடர்ந்து மும்பைப் பங்குச்சந்தையில் சரிவு தொடர்ந்து 1600 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. நிப்டியில் சரிவு 385 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது.

சரிவுக்கு என்ன காரணம்
மும்பைப் பங்குச்சந்தையில் டாடா ஸ்டீல் பங்கு மட்டும்லாபம் ஈட்டியள்ளது. மற்ற 29 நிறுவனங்களின் பங்குகளும் இழப்பை நோக்கி நகர்ந்துள்ளன
ஜியோஜித் பைனான்சியல் சேவை நிறுவனத்தின் தலைமை முதலீ்ட்டு ஆலோசகர் விஜயகுமார் கூறுகையில் “ உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்ததையடுத்து, கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து பேரல் 139 டாலரை எட்டியுள்ளது.

இது முதலீட்டாளர்களை பெரும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. உலகின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும், நாட்டின் வளர்ச்சி பாதிக்கும், பணவீக்கம் அதிகரி்க்கும் என நம்புகிறார்கள்.இதனால்தான் முன்னெச்சரிக்கையாக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பங்குச்சந்தையிலிருந்து எடுக்கத் தொடங்கியதால்தான் மோசமான சரிவு ஏற்பட்டுள்ளது. சிலர் எண்ணெய்மற்றும் எரிவாயு பங்குகளிலும், உலோகப் பங்குகளிலும் ஆர்வத்துடன் முதலீடு செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார்
