ஒரே நாளில் 2000 புள்ளிகள் உயர்ந்து இந்திய பங்குச்சந்தை வரலாற்று சாதனை..! 

வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று பங்கு சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்றம் கண்டு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்த வரி சலுகையால் பங்குசந்தை புள்ளிகள் உயர்வு பெற்று உள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2 ஆயிரம் புள்ளிகளை தாண்டி தற்போது வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச் சந்தையான தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி  600 புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது.

தயாரிப்பு துறையில் புதிய முதலீடுகளை ஈர்த்து அதன் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு வருமான வரி சட்டத்தில் 2019 - 20 நிதியாண்டு முதல் புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு தயாரிப்பு துறையில் தொடங்கப்படும் எந்த புதிய உள்ளூர் நிறுவனமும் 15 சதவீதம் மட்டும் வரி செலுத்தலாம் என்றும், வேறு எந்த சலுகைகளும் பலன்களும் பெறாதமால் 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள் தயாரிப்பை தொடங்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இந்த சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

இதன் மூலம், முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ஒரே நாளில் ரூபாய் இரண்டு லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக தொடங்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில்  முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளதால், அதிக முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். இதன் காரணமாக ஒரே நாளில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2000 புள்ளிகள் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்களும் நல்ல லாபம் அடைந்து உள்ளனர்.