செல்பி ஸ்டிக் தூக்கிபோடு....இப்ப “பறந்துக்கிட்டே செல்பி எடு “  ஜாலியா.......!!!

செல்பிக்கு அடிமையான மக்களே...இனி  பறந்துகிட்டே  செல்பி எடுங்க.....!!!

பறந்து கொண்டே செல்பி எடுக்கும் ”ஹோவர் கேமிரா” தற்போது  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அது எப்படி சாத்தியம் என   யோசனை  பண்றீங்களா...??

இதற்கு முன்பாக, டிரான் என்ற ஆளில்லா  விமானம் மூலமாகவே இது போன்ற செல்பீஸ்  செதுக்க முடிந்தது. ஆனால் தற்போது, இதற்கு மாற்றாக,  ஜீரோ ஜீரோ ரோபோடிக்ஸ் என்ற நிறுவனம் ”ஹோவர் கேமிரா” என்ற புது வகை செல்பி இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த கேமரா , நாம் எங்கு சென்றாலும் நம்  பின்னே பறந்து  வரும்,  நமக்கு  பிடித்த மாதிரி இதன் மூலம்  செல்பி  எடுத்து கொள்ளலாம்.

இனி  செல்பி எடுக்க  யாருடைய  தயவும்  தேவை இல்லை.....அதாவது உங்கள் கைகள்  கூட தேவை இல்லை ......