sbi mlcr rate: mlcr rate :நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ எம்சிஎல்ஆர் எனப்படும் கடனுக்கான இறுதிநிலை செலவு வீதத்தை 10 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இது மே-15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ எம்சிஎல்ஆர் எனப்படும் கடனுக்கான இறுதிநிலை செலவு வீதத்தை 10 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இது மே-15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

ஸ்டேட் வங்கி எம்சிஎல்ஆர் புள்ளிகளை உயர்த்தியுள்ளதையடுத்து, வீ்ட்டுக்கடன், வாகனக் கடன் வட்டி உயரும். கடன் பெற்றவர்கள் மாதந்தோறும் செலுத்தும் இஎம்ஐ கட்டணமும் அதிகரி்க்கும்

2 மாதங்கள் இடைவெளியில் கடன் வழங்குவதற்கான எம்சிஎல்ஆர் கட்டணத்தை 2-வது முறையாக ஸ்டேட் பேஃங்க் ஆஃப் இந்தியா உயர்த்தியுள்ளது. இதற்கு முன் எம்சிஎல்ஆர் ரேட் 6.75 சதவீதம் இருந்த நிலையில் இனிமேல் 6.85 சதவீதமாக அதிகரிக்கும். 

6 மாதத்துக்கான எம்சிஎல்ஆர் 7.15 சதவீதமாகவும், ஓர் ஆண்டுக்கான எம்சிஎல்ஆர் 7.20 சதவீதமாகவும், 2 ஆண்டுக்கான எம்சிஎல்ஆர் 7.40 சதவீதமாகவும், 3 ஆண்டுகளுக்கான எம்சிஎல்ஆர் 7.50 சதவீதமாகவும் இருக்கிறது.

நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி கடனுக்கான ரெப்போ ரேட்டை 40 புள்ளிகள் உயர்த்தி 4.40 என்று அதிகரித்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளும் வட்டிவீதத்தை உயர்த்தி வருகின்றன. இதன் அடிப்படையில் எஸ்பிஐ வங்கியும் எம்சிஎல்ஆர் வீதத்தை உயர்தியுள்ளது

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஸ்டேட் வங்கி எம்சிஎல்ஆர் வீதத்தை 20 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. 

எம்சிஎல்ஆர் என்றால் என்ன?

வங்கிகள் கொடுக்கும் டெபாசிட் வட்டி விகிதம், வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கின்றன. இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு கால அளவிலும் எந்தக் தொகையில் வங்கிகளுக்கு பணம் கிடைக்கிறது அதனை அடிப்படையாக வைத்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய வங்கிகள் முடிவெடுத்தன.

இதற்கு கடன் விகித இறுதிநிலைச் செலவு(மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரேட்) (எம்சிஎல்ஆர்) என்று பெயர். முன்பு அடிப்படை வட்டி விகிதத்தில் இருந்து கூடுதலாக கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும். இப்போது எம்சிஎல்ஆர். அடிப்படையில் கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது.