சேமிப்புக் கணக்கில் ரொக்க வைப்பு வரம்பு என்ன? பண பரிவர்த்தனை வரம்புகள் உண்டா? முழு விவரம்!

Savings Account : சேமிப்பு கணக்கில் ரொக்க வைப்பு வரம்பு, பண பரிவர்த்தனை வரம்பு உள்ளிட்ட பல முக்கிய வங்கி கணக்கு குறித்து விஷயங்களை இந்த பதிவில் காணலாம்.

savings account cash deposit limit what rbi says ans

சேமிப்பு கணக்கில் ரொக்க வைப்பு வரம்பு 

சேமிப்புக் கணக்குகளுக்கான ரொக்க வைப்பு வரம்பை ஒரு நாளைக்கு 1 லட்சமாக இப்பொது ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. ஒரு நாளில் இதை விட அதிகமாக ஏதேனும் தொகை கணக்கில் சேர்ந்தால், அது குறித்த தரவுகள் உடனே சோதிக்கப்பட்டும். அதே போல ஒரு வருடத்தில் வங்கி சேமிப்பு கணக்கு ரொக்க வைப்பு வரம்பு 10 லட்சமாக நிர்ணயித்துள்ளது RBI.

நடப்புக் கணக்கு (Current Account) வைப்பு வரம்பு

நடப்புக் கணக்குகள் பொதுவாக டெபாசிட் மற்றும் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட அதிக மதிப்புள்ள வணிகப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டாலும், டெபாசிட் வரம்பு 50 லட்சம் தான் அளிக்கப்பட்டுள்ளது என்பதை RBI நினைவூட்டியுள்ளது. இந்த வரம்பை மீறினால், வருமான வரித்துறையிடம் இருந்து உரிய நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். 

ஒவ்வொரு மாதமும் 20 ஆயிரம் வருமானம் வேண்டுமா? மூத்த குடிமக்களுக்கு ஏற்ற சேமிப்புத் திட்டம்

நிலையான கணக்கு (Fixed Account) வைப்பு வரம்பு

நிலையான கணக்குகளில் உள்ள பண வைப்புகளுக்கும் அதிகபட்ச உச்சவரம்பு உள்ளது என்பதை RBI நினைவூட்டியுள்ளது. வரி செலுத்துவோர் 10 லட்சத்துக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது. இருப்பினும், நீங்கள் இணைய வங்கி மற்றும் காசோலைகள் மூலம் அதிக அளவு FDகளை உருவாக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரெடிட் கார்டு பில் செலுத்தும் வரம்பு

நீங்கள் கிரெடிட் கார்டு பில்களை செலுத்தும் போது அதற்கான பண பரிவர்த்தனை வரம்பு 1 லட்சம் தான். இந்தத் தொகையை விட அதிகமான பில்களைச் செலுத்த, நீங்கள் பிற டிஜிட்டல் அல்லது பணமில்லா கட்டண முறைகளைப் பயன்படுத்தலாம். மேலும், கிரெடிட் கார்டு பில்களை செலுத்த நீங்கள் ஒரு வருடத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமாக பணத்தை செலவிட்டால், ஐடிஆர் தாக்கல் செய்யும்போது, ​​படிவம் 26ஏஎஸ்-ல் பணம் செலுத்தியதைத் வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

பங்குகள், Mutual Funds மற்றும் பத்திரங்களின் முதலீட்டு வரம்பு

நீங்கள் பங்குகள், பத்திரங்கள், Mutual Funds அல்லது கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்தால், உங்கள் மொத்த முதலீடு ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேல் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் RBI தெரிவித்துள்ளது.

பண பரிவர்த்தனை வரம்பு

இந்தியாவில் உள்ள வருமான வரிச் சட்டங்களின்படி, ஒரே நேரத்தில் 2 லட்சத்துக்கு மேல் பணப் பரிமாற்றம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு அதிகமான தொகையிலான பரிவர்த்தனைகளைச் செய்ய, வங்கிப் பரிமாற்றம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது காசோலை போன்ற மாற்றுக் கட்டண முறைகளைப் பயன்படுத்தலாம்.

ஜீரோ சம்பளத்தில் வேலை பார்க்கும் அம்பானியின் வாரிசுகள்! அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios