உலகின் விருப்பமான ஜுவல்லர் ஜோயாலுக்காஸ் இந்த ஆண்டின் மிகச்சிறந்த மற்றும் மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது. ”ஆச்சரியமான 50” இது அனைத்து நகைகளின் சேதாரத்தின் மீதும் 50% தள்ளுபடியை அளிக்கும் பிரத்யேகமான சலுகை. மேலும் நகைகளுக்கு செய்கூலியும் இல்லை. கடந்த 8 மாதங்களில் தங்கத்தின் விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் இந்த சலுகையை ஜோயாலுக்காஸ் அளிப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் நகைகளை மிகச்சிறந்த விலையில் பெறுவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. 

இந்த “ஆச்சரியமான 50” சிறப்பு ஆஃபர் குறித்து ஜோயாலுக்காஸின் நிர்வாக இயக்குநர் மற்றும் சேர்மன் திரு. ஜோய் ஆலுக்காஸ் குறிப்பிடும்போது, ”ஜோயாலுக்காஸில் நாங்கள் எப்போதும் சேதாரத்தின் மீது சிறந்த விலையை அளித்துவருகிறோம். அனைத்து நகைகளுக்கும் சேதாரத்தின் மீது 50% தள்ளுபடி என்ற சலுகை, மிகப்பெரிய சேமிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் கலை நுணுக்கம் நிறைந்த உயர்ந்தபட்ச  சிறப்புடைய நகைகளை மிகக்குறைந்த இந்த தள்ளுபடி சேதாரத்தில் வாங்கிடலாம். குறைந்தபட்ச நாட்களுக்கான இந்த சலுகையை அனைவரும் பெற்று மகிழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வாடிக்கையாளர்கள் அனைவரும் இச்சலுகையுடன் உலகத்தரம் வாய்ந்த நகைகளை வாங்கிட எங்கள் ஜோயாலுக்காஸ் ஷோரூமிற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜோய் ஆலுக்காஸ் தெரிவித்தார். 

இந்த 17 நாட்களுக்கான சலுகை பிப்ரவரி 26ம் தேதி அன்று ஆரம்பமாகியுள்ளது. இச்சலுகை மார்ச் 14 வரை வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து ஜோயாலுக்காஸ் ஷோரூம்களிலும் இச்சலுகை கிடைக்கும். மேலும் நகைகள் வாங்கும்போது இன்னும் கூடுதல் சலுகையாக ஒரு வருட இலவச இன்சூரன்ஸ், ஆயுட்கால இலவச பராமரிப்பு, கோல்டு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஆகியவையும் கிடைக்கிறது.

ஜோயாலுக்காஸ் குழுமத்தை பற்றி:

ஜோயாலுக்காஸ் குழுமம் சர்வதேச அளவிலான மல்டி பில்லியன் வர்த்தகத்தில் ஈடுபடும் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், குவைத், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்நிறுவனம் செயல்பட்டுவருகிறது. நகைகள், பணப்பரிமாற்றம், ஃபேஷன்&டெக்ஸ்டைல்ஸ், சொகுசு விமான சேவை, வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. உலகம் முழுதும் 8000 பணியாளர்கள் ஜோயாலுக்காஸ் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்கள். உலகின் அங்கீகரிக்கப்பட்ட முன்னணி ரீடெய்ல் செயின் என்ற அந்தஸ்தையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.