santhosh kumar gangwar says that banks need not to worry about loans
பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கும் வாராக்கடன் குறித்து அதிகமாக கவலைப்படத் தேவையில்லை, அதற்கு விரைவில் தீர்வு கிடைக்க பணியாற்றிவருகிறோம் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் இடையே மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார்நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறுகையில்,
“ பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் என்பது இப்போது மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. அந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதற்கான வழிமுறைகளை அரசு வௌியிடும்’’ என்றார்.
2016-17ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மாதங்கள் வரை பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் என்பது ரூ. ஒரு லட்சம் கோடி உயர்ந்து, ரூ.6.06 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக எரிசக்தி, உருக்கு, சாலை கட்டமைப்பு, ஜவுளித்துறை ஆகியவற்றுக்கு அதிகமாக கடன் கொடுத்ததன் காரணமே இந்த வாரக்கடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
