Jet Airways:மீண்டும் பறக்கும் ஜெட் ஏர்வேஸ்! சிஇஓவாக அனுபவ சஞ்சீவ் கபூர் நியமனம்

Jet Airways:ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அனுபவம் மிகுந்த சஞ்சீவ் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு நிதிநெருக்கடி காரணாக விமானச் சேவையை நிறுத்திய ஜெட் ஏர்வேஸ் விமானநிறுவனம், வரும் கோடை காலத்தில் 3 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் விமான சேவையில் இயங்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Sanjiv Kapoor to take Jet Airways to the skies again

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அனுபவம் மிகுந்த சஞ்சீவ் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2019ம் ஆண்டு நிதிநெருக்கடி காரணாக விமானச் சேவையை நிறுத்திய ஜெட் ஏர்வேஸ் விமானநிறுவனம், வரும் கோடை காலத்தில் 3 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் விமான சேவையில் இயங்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஓப்ராய் ஹோட்டலின் தலைவராக இருக்கும் சஞ்சீவ் கபூர்அந்தப் பதவியிலிருந்து விலகி, ஜெய் ஏர்வேஸ் தலைமை நிர்வாகியாக வரும் ஏப்ரல் 4ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். 

Sanjiv Kapoor to take Jet Airways to the skies again

அனுபவம் வாய்ந்தவர்

இதற்கு முன் விஸ்தாரா விமானநிறுவனத்தில் வர்த்தகப்பிரிவு அதிகாரியாகவும்,  ஸ்பைஸ் ஜெட் விமானநிறுவனத்தில் தலைமை நிர்வாக இயக்குநராகவும்  சஞ்சீவ் கபூர் இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பென்சில்வேனியா வார்டன் ப ல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்த சஞ்சீவ் கபூர், 1997ம் ஆண்டு அமெரிக்காவின் நார்த்வெஸ்ட்(தற்போது டெல்டா) ஏர்லைன்ஸில் தனது பணியைத் தொடங்கினார். 

2004்ம் ஆண்டு டலாஸில் உள்ல பெயின் அன்ட் கம்பெனி, சிங்கப்பூரில் உள்ள டெமாசெக் ஹோல்டிங், ஆரக்கள் ஆகியவற்றிலும் சஞ்சீவ் கபூர்பணியற்றியுள்ளார்.

 

விஸ்தாராவை விசாலமாக்கியவர்

கடந்த 2016- முதல் 2019ம் ஆண்டுவரை விஸ்தாராவில் தலைமை நிர்வாக அதிகாரியாக சஞ்சீவ் கபூர் பணியாற்றினார். இவர் பணியில் சேரும்போது, தினசரி 40 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் பணியிலிருந்து விலகும்போது தினசரி 200 விமானங்கள் இயக்கும் அளவுக்கு உயர்ந்தது. சொந்தமாக 9 விமானங்கள் வைத்திருந்தநிலையில் 38ஆக அதிகரித்தது. 2014-15ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் விமானநிறுவனத்திலும் வர்த்தகப்பிரிவு அதிகாரியாக இருந்து கபூர் சிறப்பாகச்செயல்பட்டார்.

Sanjiv Kapoor to take Jet Airways to the skies again

பறப்பதை காணக் காத்திருக்கிறேன்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டது குறித்து சஞ்சீவ் கபூர் கூறுகையில் “ மீண்டும் விமானப்போக்குவரத்து துறைக்கு திரும்பி வருவதை எதிர்பார்த்திருக்கிறேன். விமானப் போக்குவரத்து துறை எனக்கு மிகவும் பிடித்தது. அதிலும் ஜெட் ஏர்வேஸ், இந்தியர்களால் மிகவும் விரும்பப்படும், பழமையான, அன்பான உபசரிப்பு கொண்ட நிறுவனம். கடந்த 3 ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் தனது செயல்பாட்டை நிறுத்தியபோதிலும், இன்னும் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜெட் ஏர்வேஸ்ஸுக்கு இருக்கிறார்கள். ஜெட் ஏர்வேஸ் வானில் பறக்க இருக்கும் நாளுக்காக இனியும் காத்திருக்க முடியாது. 

விமானப் போக்குவரத்து பிரிவில் அனுபவம் வாய்ந்த திறமைாயன தொழில்முறைவல்லுநர்களுடனான ஜலான் கல்ராக் நிறுவனத்துடன் பணியாற்ற இருக்கிறேன். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் மறுகட்டமைப்பு செய்ய காத்திருக்கிறேன். இந்த டிஜிட்டல் யுகத்தில்ல அனைவரும் விரும்பப்படும் விமானநிறுவனமாக மாறும்” எனத் தெரிவித்தார்

Sanjiv Kapoor to take Jet Airways to the skies again

நிதிநெருக்கடி

கடந்த 1993ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட பழைமையான தனியார் விமானப் போக்குவரத்து ஜெட் ஏர்வேஸ். பல்வேறு நிதிநெருக்கடி காரணமாக கடந்த 2019ம் ஆண்டு செயல்பாட்டை நிறுத்தியது. அதன்பின், ஜலான் கல்ராக் கூட்டமைப்பு தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தில் மறுகட்டமைப்பு திட்டத்தை தாக்கல்செய்து மீண்டும் ஜெட்ஏர்வேஸை இயக்க ஒப்புதல் பெற்றுள்ளனர்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios