Russia Ukraine war: உக்ரைன் ரஷ்யா இடையே நடந்துவரும் போரால் உரம் விலை அதிகரித்துவரும் நிலையில், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.10ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

உக்ரைன் ரஷ்யா இடையே நடந்துவரும் போரால் உரம் விலை அதிகரித்துவரும் நிலையில், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.10ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

கச்சா எண்ணெய் விலை உயர்வு

இருப்பினும் மத்திய அரசு நிதிப் பற்றாக்குறையை 6.9%வரை வைத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது.உக்ரைன் ரஷ்யா இடையிலான போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்தவாரம்வரை பேரல் 140 டாலர் வரை உயர்ந்தது. அதன்பின் ஒபேக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து விலைப்படிப்படியாக குறையத் தொடங்கி, பேரல் சாசரியாக 110 டாலராகச் சரிந்துள்ளது.

3 மாதங்கள்

ஆனாலும், கச்சா எண்ணெய் விலை இயல்வுநிலைக்கு வருவதற்கு இன்னும் 3 மாதங்கள்வரை ஆகலாம். ஒபேக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைப் பெருக்கினாலும் குறைந்தபட்சம் நிலைமை சீராக 2 முதல் 3 மாதங்கள்வரை ஆகலாம். உரம் தாயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலை உயர்வால் உர இறக்குமதி கடுமையாகபாதிக்கும். உரத்தின் விலையும் அதிகரிக்கும்.

நடப்பு நிதியாண்டில் உர மானியத்துக்கு மத்திய அரசு ரூ.1.05 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரி்க்கும்.

கூடுதல் சுமை

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் “ கச்சா எணணெய் விலை அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் இயல்புநிலைக்கு வந்துவிடும் என நினைக்கிறோம். இந்த விலைஉயர்வால் நடப்பு நிதியாண்டி பட்ஜெட்டில் பெரிதாக எந்த கணக்கீடும் மாறப்போவதில்லை. அதிகபட்சமாக உரமானியத்துக்காக மத்திய அரசுக்கு ரூ.10ஆயிரம் கோடி கூடுதலாகச்செலவாகும். உரம் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்படுவதைத் தவிர்க்க விவசாயிகள் பருவகாலம்தொடங்குவதற்கு முன்பே உரத்தை வாங்கி இருப்பு வைப்பது நல்லது.

பொட்டாஷியம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. உரத்துக்கு முக்கிய மூலப்பொருளான பொட்டாஷ் விலை சீராக இல்லை. எதிர்காலத்தில் விலை அதிகரிக்கும்பட்சத்தில் உரத்தின் விலையும் அதிகரிக்கலாம். அப்போது விவசாயிகள் அதிகமான விலை கொடுத்து உரத்தை வாங்க வேண்டியது வரலாம்.

இருப்பு நல்லது

ஆதலால், உரத்தை விதைப்பு காலம் தொடங்குவதற்கு முன்பே வாங்கி விவசாயிகள் இருப்பு வைப்பது நல்லது, உரம் தயாரி்க்கப் பயன்படும் இயற்கை எரிவாயு விலையும் 70சதவீதம் உயர்ந்துவிட்டது. இதனால் யூரியா, உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள் விலை அதிகரிக்கும். மத்திய அரசுக்கு மானியச்சுமை அதிகரித்தாலும், அதிகமான வரிவசூல் இருப்பதால் அதை சமாளிக்கும். நிதிப்பற்றாக்குறையும் 6.9% அதிகமாகச் செல்லாமல் கட்டுப்படுத்தவும் முடியும்” எனத் தெரிவித்தார்