russia india oil: இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு விலை குறைவாகக் கிடைக்கம் கச்சா எண்ணெயை ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து வாங்குவோம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்
இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு விலை குறைவாகக் கிடைக்கம் கச்சா எண்ணெயை ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து வாங்குவோம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்
சிஎன்பிசி சேனல் சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
தேசநலன் முக்கியம்

ரஷ்யாவிடம் இருந்து மலிவான விலையில், கச்சா எண்ணெய் கிடைப்பதால் தேசநலன் கருதி இந்தியாவும் வாங்குகிறது. இதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுவிட்டது, மாஸ்கோவிலிருந்து இந்தியாவுக்கு ஏராளமான கச்சா எண்ணெய் பேரல்கள் விரைவில் இந்தியா வந்துசேரும். அடுத்தநிதியாண்டுக்குள் நுழைந்திருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடனே ஒவ்வொரு நகர்த்தலையும் முடிவு செய்வோம்
ரஷ்யாவிடம் வாங்குவோம்
தேசநலனுக்கு முக்கியத்துவம் அளித்து, எரிசக்திக்கு முன்னுரிமை வழங்குவோம். ஆதலால் ரஷ்யாவிடம்இருந்து விலை குறைவான கச்சா எண்ணெயை வாங்கத் தொடங்கிவிட்டோம். மக்களை மனதில் வைக்காமல் எந்தவிதமான முடிவும் எடுக்கக்கூடாது. என்னுடைய தேசத்துக்கு எரிசக்தி தேவையும், பாதுகாப்பும் முதலில் முக்கியம். சலுகைவிலையில் கச்சா எண்ணெய் கிடைத்தால், ஏன் நாங்கள் வாங்கக்கூடாது. நாங்கள் ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவோம்.

மாற்று எரிபொருள்
காலநிலை மாற்றம் என்பது மிகவும் தீவிரமான விஷயமாக மாறிவருகிறது. மக்களின் நலன் கருதி, பூமிக்கு கீழ் இருந்து எடுக்கப்படும் எரிபொருளில் இருந்து மாறி, சுற்றுச்சூலுக்கு கேடில்லாத எரிசக்திக்கு மாறுவது அவசியம்.இது சவாலானதுதான். பெட்ரோல், டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருள் வரும்போது செலவாகும் “ எனத் தெரிவித்தார்
மலிவு விலை

இதனிடையே இந்தியாவுக்கு சர்வதேச சந்தைவிலையிலிருந்து பேரலுக்கு 35 டாலர் குறைவாக கச்சா எண்ணெய்விற்பனை செய்ய ரஷ்யா முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஏற்றார்போல் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லார்வோ இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக வந்துள்ளார். இந்த பயணத்தின்போது, இந்தியா-ரஷ்யா கச்சா எண்ணெய் வர்த்தகம் குறித்து இறுதிமுடிவு எடுக்கப்படும்.
ஐ.நா அவையில் ரஷ்யாவுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, அமெரிக்கா, மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அழுத்தத்தையும் மீறி இந்தியா நடுநிலை வகித்தது.
உற்பத்தி வரி குறைக்கப்படுமா
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலமே ஈடு செய்கிறது. இதில் ரஷ்யாவிடம் இருந்து முதல்தரமான கச்சா எண்ணெய் 30 சதவீதம் குறைவாகக் கிடைத்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியும்.
தற்போது கச்சா எண்ணெயில் ஏற்பட்ட விலை உயர்வு, பெட்ரோல், டீசலில் சுமத்தப்பட்டு மக்கள்தான் சுமக்கிறார்கள். எரிபொருள் விலைவாசி ஏற்றத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராடிவருவதால், உற்பத்தி வரியையும் குறைக்க மத்திய அரசுக்குநிர்பந்தம் அதிகரிக்கிறது.
