Asianet News TamilAsianet News Tamil

rupee hits new low: dollar vs rupee: டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஆர்பிஐ தலையிடுமா?

rupee hits new low: dollar vs rupee:  அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் இன்று காலை வர்த்தகத்தில் வீழ்ச்சி அடைந்தது. டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.77.69ஆகக் குறைந்தது. 

rupee hits new low: dollar vs rupee:   Rupee weakens To A New All-Time Low ; Markets Eye RBI
Author
Mumbai, First Published May 17, 2022, 10:30 AM IST

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் இன்று காலை வர்த்தகத்தில் வீழ்ச்சி அடைந்தது. டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.77.69ஆகக் குறைந்தது. 

இதையடுத்து, ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையாமல் தடுப்பதைத் தடுக்கும் பொருட்டு, ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலரை சந்தையில் விற்பனை செய்யுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

rupee hits new low: dollar vs rupee:   Rupee weakens To A New All-Time Low ; Markets Eye RBI

அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் உலக கரன்ஸிகளுக்கு எதிராக டாலர் வலுப்பெற்று வருகிறது. டாலரின் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் ரூபாய், ஆசிய நாடுகளின் கரன்ஸி பெரும் நெருக்கடிக்குள்ளாகி வருகிறது. கடந்த வாரத்திலிருந்து ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவில் இருந்து வருகிறது.

அந்நியச் செலவாணி்ச் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ரூ.77.50ஆக இருந்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், 19 பைசா குறைந்து, ரூ.77.69ஆகக் குறைந்தது.

கடந்த வாரம் இதேபோன்று டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு மோசமான சரிவை நோக்கி நகர்ந்தது. அப்போது ரிசர்வ் வங்கி தலையி்ட்டு சந்தையில் டாலர்களை விற்பனை செய்ததால், ரூபாய் மதிப்பு சரிவு ரூ.77.31 பைசாவில் தடுத்து நிறுத்தப்பட்டது.

rupee hits new low: dollar vs rupee:   Rupee weakens To A New All-Time Low ; Markets Eye RBI

பொதுவாக டாலரின் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு சரிந்து மோசமான நிலையை எட்டும்போது, ரிசர்வ் வங்கி தலையிடும். அதாவது டாலருக்கான தேவை இறக்குமதியாளர்கள் மத்தியிலும், பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறும்போதும் டாலரின் தேவை அதிகரி்க்கும்.

அப்போது ரூபாய் மதிப்பு நெருக்கடிக்குள்ளாகி வீழ்ச்சி அடையும். இதைத் தடுக்க ரிசர்வ் வங்கி தலையிட்டு தேவைக்கு ஏற்றார்போல் சந்தையில் டாலர்களை விற்பனை செய்து, டாலரின் தேவையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும், ரூபாய் மதிப்பு சரியாமல் ஈடுகட்டும் அதுபோன்று இன்று ரிசர்வ் வங்கி தலையிடுமா என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்
 

Follow Us:
Download App:
  • android
  • ios