Asianet News TamilAsianet News Tamil

அடிச்சான் பாரு போனஸ் ஆர்டர்... கொரோனா பெருந்தொற்றுக்காக ஊழியர்களுக்கு தலா ரூ.1,00,000..!

1,30,000 ஊழியர்கள் இந்த ஊக்கத்தொகையை பெறுவார்கள் என தெரிகிறது. அதாவது கார்பரேட் துணைத் தலைவர் பதவிக்கு கீழ் பணி செய்யும் ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் உண்டு என கூறப்படுகிறது. 
 

Rs 1,00,000 per employee for corona epidemic ..!
Author
USA, First Published Jul 9, 2021, 4:41 PM IST

கொரோனா பெருந்தொற்று காரணமாக தனது ஊழியர்களுக்கு தலா ரூ1,00,000 ரூபாயை போனாஸாக வழங்குவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு சுமார் 1.1 லட்ச ரூபாயை போனஸாக டெக்னாலஜி சாம்ராட் நிறுவனமான மைக்ரோசாப்ட் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் சவாலான பேரிடர் காலத்தை சமாளித்தமைக்காக இந்த ஊக்கத்தொகையை ஊழியர்களுக்கு வழங்குகிறது மைக்ரோசாப்ட். இதனை தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை வெளியிடும் ‘தி வெர்ஜ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. Rs 1,00,000 per employee for corona epidemic ..!

உத்தேசமாக 1,30,000 ஊழியர்கள் இந்த ஊக்கத்தொகையை பெறுவார்கள் என தெரிகிறது. அதாவது கார்பரேட் துணைத் தலைவர் பதவிக்கு கீழ் பணி செய்யும் ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் உண்டு என கூறப்படுகிறது.

 Rs 1,00,000 per employee for corona epidemic ..!

இதற்காக சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை மைக்ரோசாப்ட் செலவிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்கள் சிலர் ஊக்கத்தொகை குறித்த மின்னஞ்சல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக உறுதி செய்துள்ளனராம். அதே நேரத்தில் அந்த தொகை எவ்வளவு என்பது அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்படவில்லை என தெரிகிறது. ஃபேஸ்புக், அமேசான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு பெருந்தொற்று போனஸ் அறிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios