repo rate rbi :ரிசர்வ் வங்கி அடுத்தவாரம் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்கான வட்டியை 40 புள்ளிகள் வரை உயர்த்தலாம் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ரிசர்வ் வங்கி அடுத்தவாரம் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்கான வட்டியை 40 புள்ளிகள் வரை உயர்த்தலாம் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

உணவுப்பொருட்கள், காய்கறிகள் விலை, பெட்ரோல்,டீசல் விலை இன்னும் குறையாததையடுத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மேலும் 40 புள்ளிகள் வரை வட்டி உயரக்கூடும் எனத் தெரிகிறது.இதனால், தற்போது கடனுக்கான ரெப்போ ரேட் 4.40 சதவீதமாக இருக்கும் நிலையில் 40 புள்ளிகள் உயர்ந்தால், வட்டி 4.80 சதவீதமாகஅதிகரிக்கும்

போபா செக்யூரிட்டிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டி 0.35 புள்ளிகள் உயர்த்தலாம். இல்லாவிட்டால் அடுத்தவாரம் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டிவீதம் 50 புள்ளிகள் உயர்த்தி, ஆகஸ்ட் மாதம் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் 25 புள்ளிகள் உயர்த்தலாம் எனத் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக இரு நிதிக்கொள்கைக் கூட்டத்துக்குள் 0.75 புள்ளிகள் வரை வட்டிவீதம் உயரும் என்று போபா செக்யூரிட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 4ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில் “ கடனுக்கான வட்டி வீதம் அடுத்தடுத்து தொடர்ந்து உயரும், ஆனால், எவ்வளவு உயரும் என்று கூற முடியாது. பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தும்வரை உயரும்” எனத் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருவதாலும், பெட்ரோல், டீசல் விலையும் குறையாததாலும் மே மாதத்தில் பணவீக்கம் 7.10 சதவீதம் வரை உயரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பெடரோல், டீசலுக்கு உற்பத்தி வரிக் குறைப்பு, சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கு இறக்குமதி வரிக்குறைப்பு, விமான எரிபொருள் விலைக் குறைப்பு போன்றவை எல்லாம் பணவீக்கத்தை குறைக்காது. நடப்பு நிதியாண்டில் பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ஆனால் பணவீக்கம் 6.8சதவீதம் வரை உயரும். 

ஜூன் மாதத்தில் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை 40 புள்ளிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 35 புள்ளிகளும் உயர்த்த வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக 75 புள்ளிகள் வரைவட்டிவீதம் உயரக்கூடும்.

ரொக்கக் கையிருப்பு வீதமும் மேலும் 50 சதவீதம் உயர்த்தப்படலாம். இதனால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்கும் இருப்பு மேலும் அதிகரிக்கும், இதனால் பணப்புழக்கம் மேலும் குறையும். 

ஏற்கெனவே ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியதால், புழக்கத்திலிருந்து 87ஆயிரம் கோடி வங்கி செயல்முறைக்குள் வரவுள்ளது. இதில் மேலும் ரொக்கக் கையிருப்பு வீதத்தை குறைக்கும்போது, பணப்புழக்கம் கடுமையாகக் குறையும். 
இவ்வாறு போபா நிறுவனம் தெரிவித்துள்ளது.