reason for sri lanka crisis: சீனாவின் ‘கடன் வலை’யில் சிக்கிய இலங்கை: மோசமான பொருளாதார சரிவுக்கு காரணமென்ன?
reason for sri lanka crisis :2.20 கோடி மக்களைக் கொண்ட அழகான குட்டித் தீவான இலங்கை, இறுதியில் சீனாவின் கடன் வலையில் சிக்கிவிட்டது.
2.20 கோடி மக்களைக் கொண்ட அழகான குட்டித் தீவான இலங்கை, இறுதியில் சீனாவின் கடன் வலையில் சிக்கிவிட்டது.
பொருளாதார நெருக்கடி
கடந்த 1948-ம் ஆண்டிலிருந்து இலங்கை அரசு பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து மீண்டு வந்திருக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம்விட, மிகவும் மோசமான காலகட்டத்தை இலங்கை சந்தித்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத, முன்எப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இலங்கை அரசிடம் அன்னியச் செலவாணி கையிருப்புகுறைந்ததும், அளவுக்குஅதிகமான வெளிநாட்டு கடனும்தான்.
சுற்றுலா மூலம் வரும் அந்நியச் செலவாணியை மட்டுமே நம்பியிருந்த இலங்கை அரசு, கொரோனாவில் சுற்றுலாத்துறை முடங்கியதால், அந்நியச் செலவாணி வரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் கடனுக்கு மேல் கடன் வாங்கித்தான்அரசை நடத்த வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது.
அந்நியச் செலவாணி
அந்நியச் செலவாணி கையிருப்பு குறைந்துவிட்டால் வெளிநாடுகளில் இருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல் , டீசல் உள்ளிட்ட பல பொருட்களை இறக்குமதி செய்ய முடியிவில்லை. உள்நாட்டில் இந்த பொருட்கள்விலை ராக்கெட்வேகத்தில் எகிறத் தொடங்கியது.
விளைவு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை மக்கள் தாங்க முடியாமல்,தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் சூழலில் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். டீசல்இல்லை, சமையலுக்கு மண்எண்ணெய் இல்லை, பால்பவுடர், காய்கறிகள், அரிசி, கோதுமை, ரொட்டிபாக்கெட் , தேநீர் என அத்தியாவசியப் பொருட்களின் விலை வாங்க முடியாத விலை உயர்வுக்கு சென்றதுவிட்டது.
பெரும் கடன்
இலங்கை அரசின் இந்த நிலைக்கு காரணம் அண்டை நாடுகளிடம் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதும், வெளிநாடுகளில் கடன் வாங்கியதும்தான். அதிலும் சீனாவுக்கு ஹம்பனோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு, கோடிக்கணக்கான டாலர்களை இலங்கை கடனாகப் பெற்றுள்ளது.
2014 முதல் கடன் அதிகரிப்பு
கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து இலங்கை அரசின் சர்வதேசக் கடன் அதிகரித்து வருகிறது, 2019-ம் ஆண்டில் சர்வதேசக் கடன் 42.6 சதவீதமாக ஜிடிபியில் அதிகரித்துவிட்டது. டாலரின் மதிப்பில் கூறினால் 2019-ம் ஆண்டில் இலங்கையின் சர்வதேசக் கடன் 3,300 கோடி டாலராகும்.
இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மேலும் மேலும் கடனை வாங்கியும், உள்நாட்டில் அதிகமான பணத்தை அச்சடித்து வெளியிட்டதாலும் மிகப்பெரிய பொருளாதாரப் பேரழிவை இலங்கை சந்தித்து வருகிறது.
இலங்கைக்கு இருக்கும் மிகப்பெரிய அளவிலான வெளிநாட்டுக் கடனில் பெரும்பகுதி சீனாவுக்குச் செலுத்த வேண்டியவை. இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் ஆறில் ஒருபகுதி சீனாவுக்குச் செலுத்த வேண்டியது. சீனாவுக்கு மட்டும்00 கோடி டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. இதுதவிர கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 100 கோடி டாலர் கடன் வாங்கி அதனை தவணை முறையில் செலுத்தவும் இலங்கை முடிவு செய்தது.
இந்தியா உதவி
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை இலங்கைக்கு 240 கோடி டாலர் அளவுக்கு கடன் வழங்கியுள்ளது. இதில் 40 கோடி மட்டும் டாலராக கரன்ஸி ஸ்வாப்பிங் முறையில்வழங்கியுள்ளது. இது தவிர கடந்த மாதம் கூடுதலாக 100 கோடி டாலர் வழங்க வேண்டும் என்று இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்ததையடுத்து, அதையும் வழங்க இந்தியா சம்மதித்தது. இந்த 100 கோடியை டாலராக இல்லாமல் உணவுப் பொருட்கள், டீசல் ,பெட்ரோல், மருந்துகள் அத்தியாவசியப் பொருட்களாக வழங்கக் கோரியிருந்தது.
சீனா மறுப்பு
ஆனால், சீனாவிடம் இருந்து எந்தவிதமான உதவியும், பதிலும் இலங்கைக்கு இல்லை. சீனாவுக்கு மட்டும் வட்டியுடன் 800 கோடி டாலர் கடனை இலங்கை செலுத்த வேண்டும். இலங்கைக்கு மட்டும் 4500 கோடி டாலர் வெளிநாட்டு கடன் இருக்கிறது
இலங்கை சந்திக்கும் வெளிநாட்டுக் கடனில் 500 கோடி அளவுக்கு மட்டும் சீனாவிடம் கடன் பட்டுள்ளது. இலங்கையின் அன்னியச் செலவாணி கையிருப்பு கரைந்ததற்கு முக்கியக் காரணம், சீனாவுடன் சேர்ந்து கொண்டு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அதிகமாக செலவிட்டதும், அந்தத் திட்டங்களுக்காக சீனாவிடம் இருந்து அதிகமாக கடன் பெற்றதுதான் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
வருவாய் ஏதுமில்லை
ஆனால், இலங்கை அரசு சீனாவின் உதவியால் செய்துவரும் உள்கட்டமைப்பு திட்டங்களால் நீண்டகாலத்தில்கூட பெரிதாக வருவாய் ஏதும் பெற முடியாது என்ற சூழலில் ஏன் செலவிட்டது என்று பொருளாதாரவல்லுநர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.இது தவிர வரும் ஜூலை மாதம் 600 கோடிக்கான கடன் பத்திரங்கள் அனைத்தும் முதிர்வு நிலையை எட்டுவதால் அதற்கு இலங்கை அரசு பணம் செலுத்த வேண்டியுள்ளது. இதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது பெரியக் கேள்விக்குறியாகும்.
சீனாவின் கடன் வலை
இந்தியாவிடம் உதவி கேட்டதுபோன்று சீனாவிடம் இலங்கை அரசு உதவி கேட்டதற்கு எந்தப்பதிலும் இல்லை, உதவியும் இல்லை. சீனாவிடம் இருந்து கூடுதலாக 100 கோடி டாலர் கடனும், 150 கோடி கடன்நீட்டிப்பும் இலங்கை அரசு கேட்டதற்கு சீனா தரப்பிலிருந்து பதில் இல்லை.
ஹாங்காங் போஸ்ட் நாளேட்டில் சமீபத்தில் வெளியான கட்டுரையில் “ இலங்கை அரசு லாபமில்லாத, வருமானவராத கட்டுமானத் திட்டங்களுக்கு சீனாவிடம் கடன் பெற்று செலவு செய்து, இப்போது மோசமான பொருளாதாரச் சிக்கலில் சிக்கியிருக்கிறது. இலங்கையில் ஏற்பட்ட இந்த பொருளாதாரச் சீரழிவு பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரி்கை மணி. சீனா விரித்த கடன் வலையில் இலங்கை சிக்கிவிட்டது”எ னத் தெரிவித்துள்ளது