கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு, பழைய ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் அறிவித்தார். அதனை தொடர்ந்து, தற்போது அனைத்து துறைகளும் சரிவு கண்டுள்ளது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை பெருமளவு சரிந்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறையை பொறுத்தவரை நடப்பாண்டில் மட்டும் வீடுகள் விற்பனை 30% வரை சரிவடையலாம் என, ஃபிட்ச் ரேட்டிங்க்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
காரணம் :
ரியல் எஸ்டேட் துறையில் தற்போத, மக்களிடையே அதிக ஆர்வம் இல்லாததாலும், அதே வேளையில் பண பரிவர்த்தனையில் அதிக பிரச்சனையை சந்தித்து வருவதாலும், மக்களிடையே வீடு மனை வாங்குவதில் ஆர்வம் குறைந்துள்ளதால், ரியல் எஸ்டேட் துறை மட்டும் 3௦ சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
விவசாய நிலங்கள் :
விவசாய நிலங்களில், வீட்டு மனைகள் போட்டு விற்பனை செய்வதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் தற்போது ரியல் எஸ்டேட் துறை சரிவு கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
