rbi bank: அதிகரித்துவரும் ஆன்-லைன் மோசடிகளைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி –Be(A)ware விழிப்பாக இருங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

அதிகரித்துவரும் ஆன்-லைன் மோசடிகளைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி –Be(A)ware விழிப்பாக இருங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

மோசடி வேலைகளில் ஈடுபடுவோர் எவ்வாறெல்லாம் செயல்பாடுகள், எந்தெந்த வழிகளில் எல்லாம் மோசடிகளைத் தொடங்குவார்கள், மக்கள் எவ்வாறு விழிப்போடு இருக்க வேண்டிய இடங்கள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டுள்ளன

ஆன்லைன் மோசடி

டிஜிட்டல் நிதிச்சேவைக்குள், பரிமாற்றத்துக்குள் அதிகமாக அறிமுகமாகாத, பழகாதவர்கள் இந்த புத்தகத்தைப்படித்தால் ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்படும். மோசடிகள் மூலம் பணத்தை இழக்காமல் தடுக்கலாம், ஏமாற்றப்படுவதிலிருந்து விடுவட முடியும். 

அனைத்து தரப்பினரையும், அனைத்து வயதினரையும், கல்வி கற்றவர்கள், ஓரளவு கற்றவர்கள் என அனைவருக்கும் சேரும் வகையில் இந்த விழிப்புணர்வு புத்தகம் சென்றடையும் நோக்கில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

விழிப்புணர்வு

பி-அவேர் சீரிஸில், “ராஜுவும் 40 திருடர்களும்” என்ற தலைப்பில் புத்தகம் வெளியாகியுள்ளது. அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் படங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சைபர் மோசடி குறித்த விளக்கப்படங்கள் உள்ளதால் எவ்வாறு மோசடியிலிருந்து தப்பிக்கலாம் என்பதை தெரி்ந்து கொண்டு பணத்தை பாதுகாப்பாக வைக்கலாம்.

ராஜூவும் 40 திருடர்களும் என்ற புத்தகத்தில் 40 வகையான கதைகளும், மோசடி சம்பவங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மோசடி, ஏமாறுவதிலிருந்து எவ்வாறு நம்மை காக்கலாம் என்பது குறித்த விஷயங்களும், செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டுள்ளன

வெவ்வேறு கதாபாத்திரம்

இந்த கதைகளில் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொருவிதமான கதாப்பாத்திரம் வெவ்வேறு வயதில் அதாவது முதியோர், காவல் அதிகாரி, விவசாயி, மாணவர் என பல்வேறு பிரிவுகளில் வந்து கதை சொல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளதுமகாராஷ்டிரா மற்றும் கோவா ரிசர்வ் வங்கியி்ன் குறைதீர்ப்பு அதிகாரி சார்பில் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களிடையே நிதி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியிட்பட்டுள்ளது.

பல்வேறு தலைப்புகள்

இந்தபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகள் , லிங்குகள் மூலம் மோசடி, கிரெட்டிகார்டு குறித்த போலி ஆஃபர், ஏடிஎம் கார்டு ஸ்கிம்மிங், ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்ஸ் மூலம் மோசடி சிம் க்ளோனிங், க்யூஆர் கோட் மூலம் மோசடி, டேட்டா கேபிள் மூலம் தகவல்களைத் திருடுதல், லாட்டரி மோசடி, ஆன்லைன் வேலை மோசடி, கோவிட் பரிசோதனை குறித்த இணையதளம், போலியாக அழைப்பேசி அழைப்பு, வைபை பயன்படுத்தும்போது மோசடி, மெசேஜ் ஆப்ஸ் மோசடி, கடன்வழங்குவதாகக் கூறி மோசடி, கிரெடிட் கார்டு லிமிட் குறித்து மோசடி என ஏராளமான தலைப்புகளில் உள்ளன. இந்த புத்தகம் ஆங்கிலம், இந்தி, மராத்தி மொழிகளில் வந்துள்ளது