Bank agents can't harass for loan recovery, use bad language or threats: rbi கடனைத் திருப்பிச் செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் கடனை வசூலிக்கச் செல்லும் வங்கிப் பரிதிநிதிகள் தரக்குறைவாகவோ மிரட்டவோ கூடாது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கடனைத் திருப்பிச் செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் கடனை வசூலிக்கச் செல்லும் வங்கிப் பரிதிநிதிகள் தரக்குறைவாகவோ மிரட்டவோ கூடாது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று மும்பையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: 

வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கும் நேர்மைாயான வாடிக்கையாளர்களை வங்கிப் பிரதிநிதிகள் தொந்தரவு செய்வதும், துன்புறுத்துவதும் பொறுத்துக்கொள்ள முடியாது. வாடிககையாளர்களை அடிக்கடி தொலைப்பேசியில் அழைத்து தொந்தரவு செய்வது, தரக்குறைவாகப் பேசி கடன் வசூலிக்க முயற்சித்தல், மிரட்டி கடனை வசூலித்தல் போன்றவை எந்த சூழலிலும் ஏற்க முடியாது. 

வங்கிகள் கொடுத்த கடனை வசூலிக்க உரிமை உண்டு. ஆனால், இதற்காக யாரையும் துன்புறுத்தக்கூடாது.வங்கிகள் முறையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்ற கடனை வசூலிக்க வேண்டும். 

டிஜிட்டல் முறையில் கடன் அளிப்பதை வலுப்படுத்தவும், பாதுகாப்பாக மாற்றவும் விரைவில் ரிசர்வ் வங்கி வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிடும். டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும்போது, நடக்கும் மோசடிகள் குறித்து மிகுந்த கவலைப்படுக்கிறோம். இதுகுறித்து மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுதொடர்பாக அவ்வப்போது ரிசர்வ் வங்கியும் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது.

பணவீக்கத்தின் நெருக்கடி இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் பணவீக்கம் இருக்கிறது. இந்த பணவீக்கத்தை உடனடியாக தடுத்தும் சக்தி யாருக்கும் இல்லை. இந்த நேரத்தி்ல் இருக்கும் உயர்ந்தபட்ச பணவீக்கத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணவீக்கத்தை உயரவிட்டு, ரிசர்வ் வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இல்லை. கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமலும் இல்லை. தேவையான நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம்.

இவ்வாரு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்