பகீர் தகவல் : ரேஷன் கார்டு எனப்படும் “ஸ்மார்ட் கார்ட்” ....! ஏழை பணக்காரனை இனம் காணுகிறது....!
வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், ரேஷன் கார்டுக்கு பதிலாக , புதிய சமரத் கார்ட் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட் கார்டில் என்னவெல்லாம் இருக்கிறது ? எதை பொருத்து ஸ்மார்ட் கார்ட் வடிமைக்கப்படுகிறது என ஆராய்ந்தால் பல திடுக்கிடும் தகவல் வெளியாகிறது.
ஸ்மார்ட் கார்டில் என்ன உள்ளது ?
நம்மை பற்றி ரேஷன் கடைகளிலோ, அருகில் வசிப்பவர்களிடமோ, மற்றும் வி ஏ ஓ உள்ளிட்டோரிடம் விசாரித்து சர்வே எடுக்கபடுகிறது. தற்போது இந்த பணி தீவிரம் அடைந்து வருகிறது.
PHH - என்றால் ஏழையாம்
NPHH - என்றால் பணக்காரர்களாம்
ஒரு வேளை , NPHH என பதிவு செய்யப்பட்டால், ரேஷன் சலுகை ஏதும் கிடையாது. மேலும் அரசு வழங்கும் எந்த இலவசமும் கிடையாதாம் .
கேஸ் சிலிண்டருக்கு மானியமும் கிடையாது
எவ்வாறு கையெழுத்து வாங்குகிறார்கள் ?
தற்போது பஞ்சாயத்து தலைவரோ அல்லது வார்டு மேம்பரோ இல்லாத காரணத்தால், அரசு அதிகாரிகள் சிலர் அந்த கிராமத்தில் வசிக்கும் சிலரிடம் கையெழுத்து வாங்கி கிராம சபையில் ஒப்புதல் வாங்கியதாக அரசுக்கு கொடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நாம் என்ன செய்ய வேண்டும் ?
நம் ரேஷன் கார்டில் , PHH உள்ளதா அல்லது NPHH உள்ளதா என பார்த்து சரிபார்த்துக்கொள்வது நல்லது.
