பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்; புதிய அறிவிப்பு!!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது KYC-ஐ டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதிலும், டெபாசிட் செய்வதிலும் சிக்கல்கள் ஏற்படலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீங்கள் கணக்கு வைத்து இருந்தால், இந்த செய்தி உங்களுக்காக மட்டுமே. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது KYC-ஐ டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதிலும், டெபாசிட் செய்வதிலும் சிக்கல்கள் ஏற்படலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) இதுவரை புதுப்பிக்கவில்லை என்றால், உடனடியாக செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் பரிவர்த்தனைகளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க: வரலாற்று உச்சத்தில் பங்குச்சந்தை! நிப்டி, சென்செக்ஸ் புதிய சாதனை! உலோகப் பங்கு ஜோர்
எஸ்எம்எஸ் தகவல்:
பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கேஒய்சி அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியுடன், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 20 மற்றும் 21, 2022 அன்று பஞ்சாப் நேஷனல் வங்கி தனது சமூக ஊடகத்தில் இது தொடர்பான அறிவிப்பை பகிர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
புதுப்பிக்க 15 நாட்கள் அவகாசம்:
பஞ்சாப் நேஷனல் வங்கி தனது ட்வீட்டில், ''ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களின்படி, அனைத்து வாடிக்கையாளர்களும் கேஒய்சி புதுப்பிக்க வேண்டியது அவசியம். செப்டம்பர் 30, 2022க்குள் உங்கள் கணக்கு புதுப்பித்து இருந்தால் அதுபற்றி ஏற்கனவே வாடிக்கையாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் டிசம்பர் 12, 2022க்கு முன்பு தங்கள் கிளை வங்கிக்குச் சென்று கேஒய்சி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் உங்கள் கணக்கில் பரிவர்த்தனை தடை செய்யப்படலாம்'' என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தங்கம் விலை மளமளவெனச் சரிவு ! நடுத்தரக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி! இன்றைய நிலவரம் என்ன?
புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும்:
பஞ்சாப் நேஷனல் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் கேஒய்சியை புதுப்பிக்க முகவரி ஆதாரம், புகைப்படம், பான் கார்டு, ஆதார் எண் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை வழங்க வேண்டும். கிளை வங்கிக்கு செல்ல முடியாதவர்கள் ஆன் லைனிலும் பதியலாம். சந்தேகம் இருக்கும் வாடிக்கையாளர்கள் கிளைக்குச் செல்வதைத் தவிர, வாடிக்கையாளர் சேவை எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
ஆர்பிஐ அறிவுறுத்தல்:
நாடு முழுவதும் அதிகரித்து வரும் இணைய மோசடி காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் கேஒய்சி புதுப்பிப்பது குறித்து அறிவுறுத்தியுள்ளது.