தனிநபர் ஒருவர் ஒரு நாட்டிற்கு பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்த விவரங்களை ஒருவர் வெளிப்படுத்தினால் அதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி, அவருக்கு அதிகபட்சமாக 6 மாதம் சிறை அல்லது அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தனிநபர் ஒருவர் ஒரு நாட்டிற்கு பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்த விவரங்களை ஒருவர் வெளிப்படுத்தினால் அதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி, அவருக்கு அதிகபட்சமாக 6 மாதம் சிறை அல்லது அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக 2022-23 நிதியாண்டு பட்ஜெட்டில் நிதி மசோதாவில், “ தரவுகள் பாதுகாப்பு” என்ற பெயரில் சுங்கத்துறைச்சட்டத்தில் பிரிவு 135ஏஏவில் அறிமுகம் செய்துள்ளது.

நிதிமசோதாவில் குறிப்பிட்டுள்ளபடி, “ இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள், சேவைகள், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், சேவைகள் குறித்த புள்ளிவிவரங்கள், ஏற்றுமதியாளர், இறக்குமதியாளர் குறித்த விவரங்களையும் தனிநபர்ஒருவர் வெளிப்படுத்தினால், பதிவிட்டால், அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். இந்த குற்றத்துக்கு அதிகபட்சமாக 6 மாதம் சிறையும், ரூ.50ஆயிரம் அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்துவிதிக்ககப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த சட்டப்பிரிவு மத்திய அரசுக்குப் பொருந்தாது. 

சுங்கவரிச்சட்டத்தில் பிரிவு 135ஏஏ பிரிவில் இது சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விவரங்கள் சுங்கத்துறையினரிடம் ஏற்றுமதியாளர் அல்லது இறக்குமதியாளர் ஒப்படைத்தபின் அந்த விவரங்களைப் பாதுகாக்கவே இந்த திருத்தம். அந்த விவரங்களை ஒருவர் அதிகாரிகளுக்குத் தெரியாமல் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். 

இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் “ ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்தவிவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கபட வேண்டியவை. ஆனால், சிலர் இதை எளிதாக எடுத்து, வெளியிட்டுவிடுகிறார்கள். இந்த திருத்தம் கொண்டுவந்ததன் மூலம் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

புள்ளியியல் சட்டத்திலும் இதேபோன்ற சட்டப்பிரிவு இருக்கிறது. அரசுக்குத் தேவையான புள்ளிவிவரங்களைச் சேகரித்தபின் அதை அரசு ஊழியர்கள் யாருக்கேனும் விற்பனை செய்தாலோ அல்லது பகிர்தாலோ அது தண்டனைக்குரிய குற்றம் என்ற பிரிவு ஏற்கெனவே புள்ளியியல் சட்டத்தில் இருக்கிறது. அவ்வாறு தெரிவித்தால், 6மாதம்வரை சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது