public sector banks:frauds: பொதுத்துறை வங்கிகளில் மோசடி 2022 மார்ச் மாதம் வரை 51 சதவீதம் குறைந்து, ரூ.40ஆயிரத்து 295 கோடியாகச் சரிந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் மோசடி 2022 மார்ச் மாதம் வரை 51 சதவீதம் குறைந்து, ரூ.40ஆயிரத்து 295 கோடியாகச் சரிந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆர்டிஐ மனு
பொதுத்துறை வங்கிகளில் நடக்கும் மோசடி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் கேள்வி கேட்கப்பட்டிருந்தார் . அதற்கு ரிசர்வ் வங்கி சார்பில் பதில் அளித்துள்ளது.

2020-21ம் ஆண்டில் 12 பொதுத்துறை வங்கிகளில் மோசடி என்பது ரூ.81ஆயிரத்து 921 கோடியாக இருந்தது. ஆனால், 2022ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைந்த மாதத்தில் வங்கி மோசடி ரூ.40ஆயிரத்து 295 கோடியாகக் குறைந்திருக்கிறது.
ஆனால், மோசடி மூலம் நடக்கும் பணத்தின் மதிப்பு பாதியாகக் குறைந்த நிலையில், மோசடிகளின் எண்ணிக்கை குறையவில்லை. 2020-21ம் ஆண்டில் வங்கி மோசடி 9ஆயிரத்து 933 மோசடியாக இருந்தது, 2021-22ம் ஆண்டில் மோசடி 7ஆயிரத்து 940 வங்கி மோசடி இருந்தது.
அதிகபட்ச மோசடி
அதிபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 431 மோசடிகள் நடந்துள்ளன, இதன் மதிப்பு ரூ.9ஆயிரத்து 528 கோடியாகும். அதைத் தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 4ஆயிரத்து 192 மோசடிகள் நடந்தன, இதன் மதிப்பு ரூ.6ஆயிரத்து 932 கோடியாகும்.
பேங்க் ஆஃப் இந்தியாவில் 209 வங்கி மோசடிகள் நடந்தன இதன் மதிப்பு ரூ.5,923 கோடி, பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ,3989 கோடி(280 மோசடிகள்), யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ,3939 கோடி(627மோசடிகள்) நடந்தன. கனரா வங்கியில் 90 மோசடிகள் மூலம் ரூ,3,230 கோடி மதிப்புள்ள பணம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கியில் 211 மோசடி மூலம் ரூ,2038 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 312 மோசடிகள் மூலம் ரூ1,733 கோடிகளும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் 72 சம்பவங்கள் மூலம் ரூ.1.139 கோடி மோசடியும் நடந்தன.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.733 கோடி மதிப்புள்ள பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது, யுசிஓ வங்கியில் ரூ.611 கோடி மோசடியும், பஞ்சாப் சிந்து வங்கியில் ரூ.455 கோடி மோசடியும் 159 நகிழ்வுகளில் நடந்துள்ளன.
இவ்வாறு ஆர்டிஐ மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
