இனி மாவட்ட தலைநகரங்களிலும் வருகிறது பாஸ்போர்ட் அலுவலகம் !

 பாஸ்போர்ட் பெறுவதற்கு தற்போது, தமிழக தலைமை இடமான , சென்னையில் மட்டுமே உள்ளது. தற்போது மக்களின் நலன் கருதி எளிதில் பாஸ்போர்ட் பெறுவதற்கு , ஏதுவாக மாவட்ட தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

பாஸ்போர்ட் அலுவலகம் : 

குஜராத்தின் தாகோட் நகரில்,பாஸ்போர்ட் அலுவலகத்தைத் திறந்து வைத்துபேசிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், இந்திய மக்கள் எளிதாகப் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகத்தைத் திறக்க மத்திய அரசு ஏற்பாடுகள் செய்து வருகின்றது என்றார்.

மேலும் தற்போது ஆன்லைன் விண்ணப்பதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் களையப்பட்டு, எல்லோருக்கும் எளிதில் பாஸ்போர்ட் கிடைக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்