மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறை திட்டங்களுக்காக ரூ.69,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

முக்கிய அறிவிப்புகள்:- 

* 2025-ம் ஆண்டுக்குள் பால் உற்பத்தி இருமடங்காக உயர்த்தப்படும். 

* 2021-ம் ஆண்டுக்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

* சாகர் மித்ரா எனும் புதிய திட்டம் மூலம் மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

* ஆயுஷ்மான் திட்டத்தில் மேலும் 112 மாவட்டங்களில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* இந்த திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

* 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மலிவு விலையில் மருந்து விற்க அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் மருந்தகங்கள் துவக்கப்படும்.

* செயற்கை நுண்ணறிவு மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சிகிச்சை

* மருத்துவ கல்லூரிகளை மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைக்க நடவடிக்கை

* பெரிய மருத்துவமனைகளில் முதுநிலை மருத்துவ பட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

*  ஏழை, எளிய மக்களுக்கான பயன்கள், மோடி ஆட்சியில் நேரிடையாக சென்றடைகின்றன.

* தொழில்நுட்பத்தின் உதவியுடன் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கப்படும்.

* மாவட்ட மருத்துவமனை அளவில் மருத்துவ கல்லூரிகள் விரிவுபடுத்தப்படும்.

* ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்ட திட்டம்

* சுகாதாரத்துறை திட்டங்களுக்காக ரூ.69,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.