Asianet News TamilAsianet News Tamil

பெட்ரோல் விலை குறைய வாய்பே இல்லை... கவுன்சில் உறுப்பினர் பகீர் தகவல்!

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தாலும் குறைக்க வாய்ப்பு இல்லை என ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.

Petroleum products under GST soon...Sushil Kumar Modi
Author
Delhi, First Published Sep 21, 2018, 4:33 PM IST

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தாலும் குறைக்க வாய்ப்பு இல்லை என ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. பைசாவில் விலை ஏறினாலும், விரைவில் 100 ரூபாயை தொட்டுவிடும் அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது.Petroleum products under GST soon...Sushil Kumar Modi

பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதையொட்டி அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். Petroleum products under GST soon...Sushil Kumar Modi

இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர் சுஷில்குமார் மோடி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவரை வரவில்லை. இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் வருவற்கான வாய்ப்பு இல்லை. Petroleum products under GST soon...Sushil Kumar Modi

பெட்ரோலியப் பொருட்கள் மூலம் மாநில அரசுகளுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. ஒரு வேளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தாலும், அதற்கு மேல் கூடுதல் வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. இதனால் பெட்ரேல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்துவிட்டால் மட்டும் அதன் விலை குறைந்து விடும் என்று கூற முடியாது என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios