Asianet News TamilAsianet News Tamil

80-ஐத் தொட்ட பெட்ரோல் விலை…மீண்டும் விலை எகிறி வருவதால் அதிர்ச்சி!!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 80 ரூபாய் 5 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக  பெட்ரோல் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது.

Petrol Price High

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 80 ரூபாய் 5 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக  பெட்ரோல் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது. இன்று நேற்றைய விலையை விட ஒன்பது காசுகள் உயர்ந்துள்ளது. இதே போல் டீசல் விலையும் உயர்ந்துள்ளது.Petrol Price High

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. முன்பு 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து தினமும் 5 காசுகள் 10 காசுகள் என உயர்த்தப்பட்டு கடந்த மே மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டு வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Petrol Price High

இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.  85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல் விலை பினர் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்றைய விலையில் இருந்து 0.09 பைசாக்கள் உயர்ந்து ரூ. 80.05க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 0.06 பைசாக்கள் உயர்ந்து ரூ. 72.35க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  இதனால் பெட்ரோல் விலை ரூ.80ஐ மீண்டும் தொட்டுள்ளது. தற்போது பெட்ரோல் விலை மீண்டும் உயரத் தொடங்கியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios