சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.102.91க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.92.95க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்கப்பட்டு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இதனிடையே, ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 140 டாலராக அதிரடியாக உயர்ந்தது. அதேசமயம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு எந்நேரமும், பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக உயர்த்தலாம் என்ற தகவல் வெளியாகின. இந்நிலையில், எதிர்பார்த்தபடி 137 நாட்களுக்கு பிறகு நேற்று, பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 76 காசு உயர்த்தி, எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு அறிவித்தது.

அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்
இந்நலையில், பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.102.91க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.92.95க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
