petrol bunks leave on sundays

மே 14ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு தோறும் வார விடுமுறை விட பங்க் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இன்று நடந்த தமிழ்நாடு பெட்ரோல், டீசல் டீலர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred


தமிழ்நாடு பெட்ரோல் டீசல் டீலர்கள் கூட்டம் இன்று காலை சென்னையில் நடந்தது, இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெட்ரோல் டீசல் டீலர்கள் மற்றும் உரிமையாளர்கள் வாரம் ஒரு நாள் அதாவது ஞாயிறு தோறும் வார விடுமுறை விட பங்க் உரிமையாளர்கள் சங்கத்தில் முடிவெடுத்துள்ளனர்.

இதை வரும் 14 முதல் நடைமுறைப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கை அடிப்படையில் மே 14ம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் செயல்படாது என Consortium of India Petroleum Dealers அமைப்பின் தலைவர் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் பெட்ரோல் டீலர்கள் இதற்கு ஒப்புதலும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.