திருந்தவே  மாட்டாங்க...!!! அட்டூழியத்தில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள்...!!!

500, 1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என  நேற்றிரவு  மோடி  அறிவித்தார். இதனை தொடர்ந்து  இன்றும் நாளையும்  வங்கிகள்   மற்றும்  ஏ.டி.எம்  மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பங்குகளில் 500  ரூபாய் நோட்டை  பங்குகளில்  பயன்படுத்தலாம்  என  அறிவிக்கப்பட்டதால், பெட்ரோல்  போட வரும் அனைவரும் , 500  ரூபாயை  பங்கில் கொடுகின்றனர்.

500  ரூபாய்க்கு, மீதம் சில்லறையை பெற  100  ரூபாய்  நோட்டுகளும்  கிடைக்காத  தருணத்தில், 500    ரூபாய்க்குமே  பெட்ரோல்  போடுகின்றனர். ஒரு சிலர்  பாட்டிலில்  பிடித்தும்  செல்கின்றனர்.

பிரதமரின்  இந்த திடீர்   அறிவிப்பால்,  பதற்றத்தில்  உள்ள  மக்களிடம், 500  ரூபாய்க்கு  5 லிட்டர்  பெட்ரோல் மட்டுமே  ஒரு  சில  பங்குகளில்  வழங்கி உள்ளனர்.

இதிலும்   பணத்தை   கொள்ளையடிக்க  திட்டமிட்டுள்ள இவர்களை  என்ன  சொல்வது..... என்ன செய்வது.......!!!