குறைந்த வட்டியில் தனிநபர் கடன்: சிறந்த வங்கிகள் எவை?

திடீர் பணத் தேவைகளுக்கு தனிநபர் கடன்கள் உதவியாக இருக்கும். குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்களை வழங்கும் முன்னணி வங்கிகளின் பட்டியல் இங்கே.

Personal Loan options 2025 Lowest Interest Rates Comparison for Top 10 Banks

திடீரென்று பணம் தேவைப்படும்போது, தனிநபர் கடன்கள் மிகவும் உதவியாக இருக்கும். குறைந்த ஆவணங்கள் மற்றும் விரைவான கடன் வழங்குதல் ஆகியவை தனிநபர் கடன்களை கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றன. குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்களை வழங்கும் முன்னணி வங்கிகள் எவை என்று பார்ப்போம்.

1. எச்டிஎஃப்சி வங்கி

அதிகபட்ச கடன் தொகை: 40 லட்சம் ரூபாய் வரை
புராசசிங் கட்டணம்: 6,500 ரூபாய் வரை
கடன் காலம்: 6 ஆண்டுகள் வரை

2. ஐசிஐசிஐ வங்கி

அதிகபட்ச கடன் தொகை: 50 லட்சம் ரூபாய் வரை
புராசசிங் கட்டணம்: கடன் தொகையில் 2% வரை
கடன் காலம்: 6 ஆண்டுகள் வரை

3. இந்தியன் வங்கி

அதிகபட்ச கடன் தொகை: மாத மொத்த சம்பளத்தில் 20 மடங்கு வரை
புராசசிங் கட்டணம்: கடன் தொகையில் 1%
கடன் காலம்: 7 ஆண்டுகள் வரை

எவ்வளவு சம்பளம் இருந்தால் தனிநபர் கடன் கிடைக்கும்? முக்கிய விதிமுறைகள் என்னென்ன?

4. கனரா வங்கி

அதிகபட்ச கடன் தொகை: 10 லட்சம் ரூபாய் வரை
புராசசிங் கட்டணம்: கடன் தொகையில் 0.50% வரை
கடன் காலம்: 7 ஆண்டுகள் வரை

5. ஐடிஎஃப்சி வங்கி

அதிகபட்ச கடன் தொகை: 10 லட்சம் ரூபாய் வரை
புராசசிங் கட்டணம்: கடன் தொகையில் 2% வரை
கடன் காலம்: 5 ஆண்டுகள் வரை

6. பேங்க் ஆஃப் பரோடா

அதிகபட்ச கடன் தொகை: 20 லட்சம் ரூபாய் வரை
புராசசிங் கட்டணம்: 2% வரை (அதிகபட்சம் 10,000 ரூபாய்)
கடன் காலம்: 7 ஆண்டுகள் வரை

இன்ஸ்டன்ட் தனிநபர் கடன் செயலிகளின் எழுச்சி: விரைவான நிதித் தேவைகளுக்கான நவீன தீர்வு

7. ஆக்சிஸ் வங்கி

அதிகபட்ச கடன் தொகை: 10 லட்சம் ரூபாய் வரை
புராசசிங் கட்டணம்: கடன் தொகையில் 2% வரை
கடன் காலம்: 5 ஆண்டுகள் வரை

8. யெஸ் வங்கி

அதிகபட்ச கடன் தொகை: 40 லட்சம் ரூபாய்
புராசசிங் கட்டணம்: கடன் தொகையில் 2.5% வரை
கடன் காலம்: 5 ஆண்டுகள் வரை

9. பஞ்சாப் நேஷனல் வங்கி

அதிகபட்ச கடன் தொகை: 20 லட்சம் ரூபாய் வரை
புராசசிங் கட்டணம்: கடன் தொகையில் 1% வரை
கடன் காலம்: 7 ஆண்டுகள் வரை

10. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

அதிகபட்ச கடன் தொகை: 35 லட்சம் ரூபாய் வரை
புராசசிங் கட்டணம்: இல்லை
கடன் காலம்: 7 ஆண்டுகள் வரை

நீங்கள் விரும்பும் கடன் ஒப்பந்தத்தைப் பெற ஆரோக்கியமான கிரெடிட் ஸ்கோர்  பராமரிப்பது முக்கியம். கிரெடிட் ஸ்கோர் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இதுதான் நீங்கள் கடன் பெறுவதற்கான தகுதி அளவுகோலாக இருக்கிறது. இது கடன் வழங்கும் வங்கிக்கு உங்களது நிதி நிலைமை மற்றும் நிதி மேலாண்மை அறிந்து கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற முடிவை எடுக்க வைக்கிறது.  இதன் மூலம் நீங்கள் கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியுமா? முடியாதா? என்பதை கடன் வழங்குபவர் தீர்மானிக்கிறார்.

நீங்கள் கடன் மீது செலுத்தி வரும் மாதத் தவணைகளை தவறாமல் செலுத்தி வந்து இருக்க வேண்டும். நிலுவை இருக்கக் கூடாது. மாதத்தவணையை கட்டாமலும் விட்டு இருக்கக் கூடாது. உங்களுக்கு நிதி தேவைப்படுவதையும், நிதி நெருக்கடியை எதிர்கொள்வதையும் இது உறுதி செய்கிறது. 

முக்கியமான விஷயம், உங்களுக்கு தனிநபர் கடன் அவசியம் என்றால் மட்டும் வாங்குங்கள். ஏனென்றால் இதன் மீது வட்டி அதிகம். எனவே ஒருமுறைக்கு இருமுறை எப்போதும் இந்தக் கடனை பெறுவதற்கு முன்பு சிந்திக்க வேண்டும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios