ரூ.15-க்கும் குறைவான விலையில் இருந்த ஒரு பென்னி பங்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 15000% லாபம் கொடுத்து அசத்தியிருக்கு. இந்த பங்கு இப்ப ரூ.2,000 ரேஞ்சில் வர்த்தகம் ஆகிறது. பிப்ரவரி 21 வெள்ளிக்கிழமையும் பங்கு உயர்ந்து இருந்தது. 

Multibagger Stock : ஷேர் மார்க்கெட் தடுமாறிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் ஒரு மல்டிபேக்கர் பங்கு மட்டும் லாபத்துக்கு மேல் லாபம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை சரிவுடன் காணப்பட்டது. ஆனால், இந்த பங்கு மட்டும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்திருக்கிறது. கடந்த ஐந்து வருடத்தில் இந்த பங்கு கிட்டதட்ட 15000% வரைக்கும் உயர்ந்து அசத்தி இருக்கிறது. இன்னும் ஏறுமுகமாவே இருக்கிற இந்த பங்கு Indo Thai Securities Ltd. 2020ல் வெறும் 15 ரூபாய்க்கு விற்ற இந்த பங்கு தற்போது 2,000 ரூபாய் ரேஞ்சுக்கு உயர்ந்து வர்த்தகம் செய்கிறது.

Indo Thai Securities Share விலை என்ன? 

பிப்ரவரி 21 வெள்ளிக்கிழமை அன்று, இந்தோ-தாய் செக்யூரிட்டீஸ் பங்கு (Indo Thai Securities Share Price) 1,993 ரூபாய்க்கு முடிந்தது. ஐந்து வருடத்தில் இது மல்டிபேக்கர் நல்ல லாபம் கொடுத்திருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு 14825% லாபம் கிடைத்து இருக்கிறது. 

15 ரூபாய்க்கு விற்ற பங்கு இவ்வளவு லாபமா? 

2020ல் Indo Thai Securities Ltd பங்கு வெறும் 13.40 ரூபாய்க்கு தான் விற்றது. ஆனால், இன்று 2,000 ரூபாய் அளவிற்கு மதிப்பு உயர்ந்துள்ளது. 2021ல் இந்த பங்கு 1,205% வரைக்கும் உயர்ந்து காணப்பட்டது. பின்னர், 2022ல் 456%ம், 2024ல் 53% அதிகரித்து இருந்தது. செப்டம்பர் 2024ல் இந்த பங்கு 80.46%ம், ஆகஸ்ட் 2024ல் 55.51% அதிகரித்தது. 

LIC ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்.. அதிரடியாக உயர்ந்த பங்குகள்; தேடி வந்த குட் நியூஸ்

Indo Thai Securities கொடுத்த 1.5 கோடி லாபம்

Indo Thai Securities பங்கில் 5 வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருந்தால், இன்று 1.50 கோடி ரூபாய்க்கு அதிபதியாக ஆகியிருப்பார்கள். பலருக்கும் இதுபற்றி தெரிய வாய்ப்பில்லை. ஆனா இதன் மல்டிபேக்கர் ரிட்டர்ன் முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக மாற்றி இருக்கிறது. 

கோடீஸ்வரராக்கும் ஆனிக்ஸ் சோலார் பங்குகள்!!

Indo Thai Securities Ltd என்ன தொழில் செய்கிறது?

இந்தோ தாய் செக்யூரிட்டீஸ் லிமிடெட் 1995ல் ஆரம்பிக்கப்பட்டது. இது NSE-BSEல் பதிவாகி இருக்கும் பெரிய நிறுவனம். இதன் மார்க்கெட் கேப் 2,200 கோடி ரூபாய். இந்த கம்பெனி 16 விதமான தொழிலில் ஈடுபட்டுள்ளது. ரியல் எஸ்டேட், கிரீன் டெக்னாலஜி, IFSC மாதிரியான துறைகளில் முதலீடு செய்து இருக்கிறார்கள். 

குறிப்பு- எந்த முதலீடு பண்றதுக்கு முன்னாடியும் மார்க்கெட் எக்ஸ்பர்ட் கிட்ட கண்டிப்பா ஆலோசனை கேளுங்க.