மார்ச் மாதத்தில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 4.87 சதவீதம் வீ்ழ்ச்சி அடைந்து, 2 லட்சத்து 71ஆயிரத்து 358 வாகனங்கள்தான் விற்பனையாகியுள்ளன என ஆட்டமொபைல் முகவர்கள் கூட்டமைப்பு(எப்ஏடிஏ) தெரிவித்துள்ளது

மார்ச் மாதத்தில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 4.87 சதவீதம் வீ்ழ்ச்சி அடைந்து, 2 லட்சத்து 71ஆயிரத்து 358 வாகனங்கள்தான் விற்பனையாகியுள்ளன என ஆட்டமொபைல் முகவர்கள் கூட்டமைப்பு(எப்ஏடிஏ) தெரிவித்துள்ளது

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 240 வாகனங்கள் விற்பனையான நிலையில் 2022 மார்சில் 5 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர், சீனாவில் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் ஆகியவற்றால் சப்ளையில் சிக்கல் ஏற்பட்டு உரித்த நேரத்தில் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய முடியவில்லை.

இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை விற்பனை 4.02 சதவீதம் சரிந்து, 11 லட்சத்து 57ஆயிரத்து 681 வாகனங்கள்தான் விற்பனையாகின. இது 2021, மார்ச் மாதத்தில் 12 லட்சத்து 6ஆயிரத்து 191 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன

வர்த்தகரீதியான வாகன விற்பனையைப் பொறுத்தவரை 14.91 சதவீதம் உயர்ந்து 77ஆயிரத்து 938 வாகனங்கள் விற்பனையாகின. கடந்த 2021ம் ஆண்டில் இது 67ஆயிரத்து 828 வாகனங்கள்தான் விற்பனையாகியிருந்தன

3 சக்கரவாகனங்களைப் பொறுத்தவரை விற்பனை 26.61 சதவீதம் உயர்ந்து, மாரச்சில் 48,284 வாகனங்கள் விற்பனையாகின. கடந்த 2021ம் ஆண்டு மார்ச்சில் 38ஆயிரத்து 135 வாகனங்கள்தான் விற்பனையாகின.

ஒட்டுமொத்தமாக வாகனங்கள் விற்பனை 2.87 சதவீதம் சரிந்து, 16 லட்சத்து 19ஆயிரத்து 181வாகனங்கள் விற்பனையாகின. இது கடந்த 2021ம் ஆண்டி்ல 16 லட்சத்து 66 ஆயிரத்து 996 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன.

எப்ஏடிஏ அமைப்பின் தலைவர் வின்கேஷ் குலாத்தி கூறுகையில் “ பயணிகள் வாகனங்களுக்கு தொடர்ந்து தேவை இருக்கிறது. செமிகன்டக்டர் கிடைப்பதில் சிக்கலால் காத்திருப்பு இருக்கிறது. இதனால்தான் சப்ளையில் சிக்கல் ஏற்பட்டு விற்பனை குறைகிறது. கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீளத் தொடங்கியநிலையில் இரு சக்கரவாகன விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. பெட்ரோல் விலை உயர்வு, காப்பீடு உயர்வு போன்றவற்றால் வரும் மாதத்தில் இன்னும் விற்பனை மந்தமாகும்” எனத் தெரிவித்தார்