சில்லறை விற்பனை :
சில்லறை விற்பனையில் , ஒரு கிலோ கறிக்கோழி ரூபாய் 13௦ ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. குறிப்பாக பொங்கல் திருநாளுக்கு முன்பு வரை கிலோ 13௦ ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது, 5௦ ரூபாய் வரை அதிகரித்து, கிலோ ரூபாய் 180 க்கு விற்பனை செய்யபப்டுகிறது.
5௦ ரூபாய் வரை விலை உயர காரணம் என்ன ?
விலை உயர்விற்கு, வரத்து குறைவு மற்றும் நுகர்வு அதிகரிப்பு காரணமாக கூறப்படுகிறது.இருந்தபோதிலும், கடல் நீரில் கச்சா எண்ணெய் கலந்ததால், மீன் வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காண்பித்ததையடுத்து, கறிக்கோழியின் விற்பனை சூடு பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
