Zomato 10 minute delivery: வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த அடுத்த 10 நிமிடங்களில் உணவு, மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை ஜோமேட்டோ அடுத்த மாதம் நடைமுறைக்கு கொண்டு வருகிறது.
வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த அடுத்த 10 நிமிடங்களில் உணவு, மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை ஜோமேட்டோ அடுத்த மாதம் நடைமுறைக்கு கொண்டு வருகிறது.

குருகிராம்
இந்தத் திட்டம் முதல்கட்டமாக பரிசோதனை முயற்சியாக குருகிராம் உள்ள 4 முக்கியப் பகுதிகளில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. 10 நிமிடங்களில் டெலவரிக்காக 20 முதல் 30 வகையான உணவுகள் மட்டும் பட்டியலிடப்படும். அனைத்து உணவுகளும் 10 நிமிடங்களில் வழங்க முடியாது என்பதால், இந்த 30 வகையான உணவுகள் மட்டும் பல்வேறு ரெஸ்டாரன்ட்கள் பட்டியலில் சேர்க்கப்படும்.
பரிசோதனை முயற்சி
ஜோமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் கூறுகையில் “ விரைவாக டெலிவரி செய்வோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 10 நிமிடங்களில் டெலிவரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக குருகிராம் நகரில் 4 முக்கியப் பகுதிகளில் மட்டும் இந்த திட்டம் அடுத்த மாதத்தில் செயல்படும்.

இந்த திட்டத்தில் எங்களோடு கைகோர்த்துள்ள ரெஸ்டாரன்ட்கள், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள், ஹோட்டல்கள் என யாருக்கும் எந்தவிதமான நெருக்கடியும் கொடுக்கமாட்டோம். விரைவாக உணவு தராவிட்டால் அவர்களுக்கு அபராதமும் விதிக்கமாட்டோம்.
சரியான நேரத்துக்கு உணவு வழங்கவே டெலிவரி ஊழியர்கள் முயற்சிப்பார்கள். ஆனால், சாலையின் சூழல், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றையும் கணக்கில் கொள்ல வேண்டும். அனைத்தும் நாம் நினைத்தவகையில் நடக்காது.
வாடிக்கையாளர்கள் தேவை
இந்த 10 நிமிடங்களில்டெலவரி திட்டத்தை மிகவும் நெருக்கமான இடங்கள்,பகுதிகளுக்கு மட்டுமே முதலில் செயல்படுத்தப் போகிறோம். அதிலும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்பவே இது செயல்படுத்தப்படும். 10 நிமிடங்களில் டெலிவரி என்பதற்காக கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்படாது வழக்கமான கட்டணங்களே வசூலிக்கப்படும்.

புத்தாக்க முயற்சி
இன்றைய சூழலில் புத்தாக்க முறையில் ஏதேனும் செய்தால்தான் நாம் இந்த தொழில்நுட்ப உலகில் நிலைத்திருக்க முடியும்.”எனத் தெரிவித்தார்
ஸ்டார்ட் அப்நிறுவனமான பிளின்கிட் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்ததால், அந்த நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் ஜோமேட்டோ ஈடுபட்டு வருகிறது.

ஜோமேட்டோ நிறுவனத்தைப் போல் பிளின்கிட்டும் உணவு டெலிவரி நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிளின்கிட்டின் சிந்தனையில் உருவானதுதான் 10 நிமிடங்களில் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் டெலிவரி திட்டமாகும். ஜோமேட்டோவில் தற்போது ஆர்டர் செய்தால் வாடிக்கையாளருக்கு உணவு கிடைக்க குறைந்தபட்ச 30 நிமிடங்கள் ஆகிறது. வளர்ந்துவரும்சந்தையில் 30 நிமிடங்கள் தாமதம் என்பதால், அடுத்தக் கட்டத்துக்கு ஜோமேட்டோ நகர்கிறது.
