2026 – 27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தற்போது தாக்கல் செய்யப்படும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரியில் கலாசார மையம் அமைக்கப்பட உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2026 – 27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட் தொடரில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில் அரியவகை கனிம வளங்களை எடுக்கும் விதமாக தமிழகத்தில் மையங்கள் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் செயல்படுத்தப்படும். பொதிகை மலை, இமாச்சல், ஜம்மு காஷ்மீரில் டிரக்கிங் சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்பட உள்ளாக தெரிவித்துள்ளார். இதனால் தூத்துக்குடி மாவட்டம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.