தனிநபர் கடன் மீது அதிரடி மாற்றம் கொண்டு வந்த RBI: கடன் வங்குவதில் சிக்கல்?
தனிநபர் கடன் வேண்டுமா? ஏற்கனவே கடன் வாங்கியிருக்கிறீர்களா? புத்தாண்டில் இருந்து ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மாற்றியுள்ளது. தனிநபர் கடன் விதிமுறைகள் இறுக்கப்பட்டுள்ளன. இப்போது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தனிநபர் கடன்கள் கிடைக்காது.
தனிநபர் கடன் வேண்டுமா என்று அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருக்கும். உடனடி கடன் பெற எந்த ஆவணமும் தேவையில்லை. உடனடியாக கணக்கிற்கு பணம், மாதாந்திர தவணை செலுத்தினால் போதும். இவ்வாறு வங்கிக் கடன் பிரிவு ஊழியர்கள் அழைப்பார்கள். தனிநபர் கடன் மற்ற அனைத்துக் கடன்களையும் விட எளிதாகப் பெற முடியும். மற்ற கடன்களுக்கு அதிக ஆவணங்கள் தேவை. ஆனால் தனிநபர் கடன், கணக்கு வைத்திருப்பவரின் சம்பளம், பரிவர்த்தனைகள், சிபில் ஸ்கோர் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பெறலாம். ஒரு வங்கியில் கடன் பெற்ற பிறகு, அவசரத் தேவை ஏற்பட்டால், மற்றொரு வங்கியிலும் கடன் பெறலாம். ஆனால் புத்தாண்டில் இருந்து ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது. குறிப்பாக தனிநபர் கடன் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
தனிநபர் கடன் விதிமுறைகளில் உள்ள சிறிய ஓட்டைகளைப் பயன்படுத்தி பலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் அதிகக் கடன் வாங்கி திவாலாகி, கடன் செலுத்த முடியாமல் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். எனவே ரிசர்வ் வங்கி இப்போது புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. புதிய விதிமுறைகளில் தனிநபர் கடனுக்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது.
RBI-யின் புதிய விதிமுறைகளின்படி, கடன் வழங்கும் வங்கிகள் அல்லது நிறுவனங்கள், கடன் பெற்றவரின் தகவல், கடன் தொகை, சிபில் மதிப்பெண் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் 15 நாட்களுக்குள் புதுப்பிக்க வேண்டும். இதுவரை 30 நாட்கள் அவகாசம் இருந்தது. ஆனால் இப்போது 15 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே நேரத்தில் பல்வேறு வங்கிகளில் தனிநபர் கடன் பெறுவது தடுக்கப்படும் என்று RBI கூறியுள்ளது.
இதுவரை கடன் பெற்ற 40 நாட்களுக்குப் பிறகே மற்றொரு கடன் வழங்கும் வங்கிக்கு இந்தத் தகவல்கள் கிடைக்கும். இதனால் பலர் ஒரு வங்கியில் தனிநபர் கடன் பெற்று, மற்றொரு வங்கியிலும் விண்ணப்பித்து கடன் பெறுவார்கள். இதைத் தடுக்க RBI புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. ஒரு தனிநபர் கடன் பெற்ற பிறகு, வேறு எந்த வங்கியிலும் அதே நபருக்கு, அதே நேரத்தில் தனிநபர் கடன் பெற முடியாது. ஒரு தனிநபர் கடன் நிலுவையில் இருக்கும்போது மற்றொரு தனிநபர் கடன் பெற முடியாது. இதற்கு RBI விதிமுறைகளை இறுக்கியுள்ளது.
தனிநபர் கடன் பெற்ற பிறகு, வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற பிற கடன்களைப் பெற முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கும் RBI பதில் அளித்துள்ளது. உதாரணமாக, தனிநபர் கடன் பெற்ற பிறகு, கார் கடன் அல்லது வேறு ஏதேனும் கடன் பெறலாம். ஆனால் கடன் பெறுபவரின் வருமானம், வாங்கிய கடனுக்குச் செலுத்தும் EMI உள்ளிட்ட கடன் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்தது. வங்கிக்கு இதற்கென விகித விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையை மேலும் கடுமையாக்கியுள்ளது.
விரைவாகக் கடன் பெற்றவர்களின் தகவல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். இதனால் எந்த வங்கிக்கும் கடன் விண்ணப்பம் வந்தால், முழுத் தகவலும் கிடைக்கும். இதனால் கடன் வழங்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்க எளிதாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.