பி.எம்.டபிள்யூ. நிறுவனம் விரைவில் புதிய X4 மாடலை அரிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய X3 மாடலை தொடர்ந்து பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தற்போது புதிய X4 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தியாளரான பி.எம்.டபிள்யூ. புதிய X4 ஃபேஸ்லிஃப்ட் மாடலை மார்ச் மாத முதல் வாரத்தில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இந்த கார் M ஸ்போர்ட் வேரியண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
2021 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மூன்றாம் தலைமுறை ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய மாடலில் கூர்மையான ஹெட்லேம்ப்கள், புதிய மற்றும் யுனிஃபைடு கிட்னி கிரில், ரி டிசைன் செய்யப்பட்ட பம்ப்பர்கள், பின்புறம் மெல்லிய லைட்கள் உள்ளன. புதி X4 மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் முந்தைய மாடலை விட அதிகமாக ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய பி.எம்.டபிள்யூ. X4 மாடலில் அடாப்டிவ் எல்..இ.டி. ஹெட்லைட்கள், புதிய 19 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. இந்த மாடல் புரூக்லின் கிரே, மினரல் வைட் மற்றும் பிளாக் சஃபையர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. உள்புறம் 12.3 இன்ச்டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, பி.எம்.டபிள்யூ. லைவ் காக்பிட் புரெபஷனல், பானரோமிக் சன்ரூஃப், ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இத்துடன் பல்வேறு ஏர்பேக், குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா, TPMS, CBC, ESC, டிராக்ஷன் கண்ட்ரோல், டைனமிக் டேம்ப்பர் கண்ட்ரோல், பெர்ஃபார்மன்ஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு டிரைவிங் மோட்கள் உள்ளன.
புதிய பி.எம்.டபிள்யூ. X4 மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டுவின் டர்போ, பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 248 பி.ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 3 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 282 பி.ஹெச்.பி. திறன், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இரு என்ஜின்களுடன் ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டதும் மெர்சிடிஸ் பென்ஸ் GLC கூப் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
