மகாத்மா காந்தி சீரிஸ்-2005 அடிப்படையிலான புதிய ரூ.100 நோட்டுகள் மிக விரைவில் மக்களுக்கு புழக்கத்தில் விடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

மகாத்மா காந்தி சீரிஸ்-2005 அடிப்படையிலான புதிய 100 ரூபாய் நோட்டுகள் மிகவிரைவில் வௌியிடப்படும்.

அதில் எண்களுக்கு அருகே ஆர் என்ற எழுத்து அச்சிடப்பட்டு, அதில் கவர்னர் உர்ஜித் படேலின் கையொப்பம் இடப்பட்டு இருக்கும்.

ரூபாய் நோட்டின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்ட ஆண்டான 2017ம் ஆண்டு அச்சிடப்பட்டு இருக்கும்.

ஏற்கனவே வெளியான ரூ.100 நோட்டுகளைப் போலவே இருக்கும். அதுமட்டுமல்லாமல் ரூபாய் நோட்டு எண்கள் சிறியதில் இருந்து பெரிதாக இருக்குமாறும், பாதுகாப்பு கோடுகளும், அடையாளக் குறியும் இடம் பெற்று இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.