கடுப்பான  மும்பை நீதிமன்றம்.....மீண்டும் கிங்பிஷர் விமானம் ஏலம்....!!!.

மல்லையாவின் கிங்பிஷர் விமானத்தை டிசம்பர் 15ம் தேதிக்குள் விற்பனை செய்ய வேண்டும் என்று, சேவை வரி துறைக்கு மும்பை நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.

கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் 9,000 கோடிக்கு மேல் கடன் பாக்கி வைத்துவிட்டு இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்  என்பது  அனைவருக்கும்  தெரியும்.இவரிடமிருந்து  வரி பாக்கியை  வசூலிக்க சொகுசு விமானத்தை கைப்பற்றி  ஏலம்  விடப்பட்டது. இருந்தாலும், எதிர்பார்த்த  தொகை கிடைக்காததால்,ஏலம்  தோல்வியில் முடிவடைந்தது.

இந்த  வழக்கு  தொடர்பாக மும்பை   நீதிமன்ற  நீதிபதிகள்  ‘‘மல்லையாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இந்த விமானம், நீண்டகாலமாக விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, இந்த விமானத்தை விற்பது தொடர்பான அனைத்து வித நடவடிக்கைகளையும் டிசம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்’’ என்று மும்பை  நீதிமன்றம்  உத்திரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.