moodys:2022ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 40 புள்ளிகள் குறைத்து, 9.1சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச கடன்தர ரேட்டிங் நிறுவனமான மூடிஸ் முதலீட்டாளர் சேவை நிறுவனம் கணித்துள்ளது. 

moodys:2022ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 40 புள்ளிகள் குறைத்து, 9.1சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச கடன்தர ரேட்டிங் நிறுவனமான மூடிஸ் முதலீட்டாளர் சேவை நிறுவனம் கணித்துள்ளது. 

உக்ரைன் ரஷ்ய போர்

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டி்ல இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திலிருந்து 9.5சதவீதமாக இருக்கும் என கடந்த மாதம் மூடிஸ் நிறுவனம் கணித்திருந்த நிலையில் இந்த மாதம் 9.5%லிருந்து 9.1%ஆகக் குறைத்துள்ளது.

டெல்டா, ஒமைக்ரான் தொற்றிலிருந்து இந்தியா வேகமாக மீண்டும் பொருளாதார மீட்சி அடைந்துவந்ததால், 7சதவீதத்திலிருந்து 9.5%மாகவளர்ச்சி இருக்கும் என மூடிஸ் கணித்திருந்தது.

மூடிஸ் நிறுவனம் இன்று வெளியிட்ட அ றி்க்கையில் கூறியிருப்பதாவது

கச்சா எண்ணெய் விலை உயர்வு

 “ கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது இந்தியா அதிகமாகப் பாதிக்கப்படும். ஏனென்றால் தனது தேவையில் 80% வெளிநாடுகளி்ல இருந்துதான் இந்தியா இறக்குமதி செய்கிறது. தானியங்கள், வேளாண் பொருட்களை அதிகமாக இந்தியா உற்பத்தி செய்வதால், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையால் இந்தியா தனது ஏற்றுமதியை அதிகரித்துக்கொள்ளலாம்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, உரங்கள்விலை அதிகரிப்பு ஆகியவை மத்தியஅரசின் நிதிநிலையை பாதிக்கும், முதலீட்டுக்கும், உள்கட்டமைப்புக்கும் செலவிட வேண்டிய தொகை குறையக்கூடும். இந்த காரணங்களால் 2022ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 0.4% குறைத்துக் கணித்துள்ளோம்

குறைப்பு

இதனால் 2022ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.1% மட்டுமே வளர்ச்சிஅடையும் என எதிர்பார்க்கிறோம். 2023ம் ஆண்டில் 5.4% வளர்ச்சி இருக்கும். 

உக்ரைன் மீதான ரஷ்யப் போர் உலகளவில் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கமாடிட்டி விலை உயர்ந்தது, சப்ளையில் ஏற்படும் சிக்கலால் உள்ளீட்டுச் செலவு அதிகரிக்கும், இதனால் நுகர்வோர் பணவீக்கமும் அதிகரிக்கும்.

நிதி மற்றும் வர்த்தக சீர்குலைவு, ஒருங்கிணைந்த பொருளாதாரத்துக்கு இடர்களை உருவாக்கும். புவிஅரசியல் சார்ந்த ஊழல் பொருளாதாரத்தில் செலவுகளை அதிகப்படுத்தும், இதன் தாக்கம் பொருளாதாரத்தில் இருக்கும். உலகப் பொருளாதாரச் சூழல்களை அடிப்படையாக வைத்து வளர்ச்சியைக் குறைத்துள்ளோம்”

இவ்வாறு மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.