modi mann ki baat: இந்தியாவில் உள்நாட்டில் தயாராகும் பொருட்களுக்கு ஒவ்வொரு இந்தியரும் ஆதரவு அளிக்கும்போது, உள்நாட்டுப் பொருட்கள் உலகளவில் சென்று சேர்வதற்கு நீண்டகாலம் ஆகாது என்று மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்நாட்டில் தயாராகும் பொருட்களுக்கு ஒவ்வொரு இந்தியரும் ஆதரவு அளிக்கும்போது, உள்நாட்டுப் பொருட்கள் உலகளவில் சென்று சேர்வதற்கு நீண்டகாலம் ஆகாது என்று மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.
மன் கி பாத்
பிரதமர் மோடி வானொலி மூலம் மக்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று உரையாற்றி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, 87-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த மாத மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

பெருமை
இந்தியாவிடம் ஏராளமான ஆற்றல் பொதிந்து கிடப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். குறிப்பாக விவசாயிகள், கலைஞர்கள், நெசவாளர்கள், பொறியாளர்கள், சிறு தொழில்முனைவோர்கள், சிறு,குறு,நடுத்தர தொழில்முனைவோர்கள், பல்வேறு தொழில்பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
இவர்களின் கடினமான உழைப்பால்தான் நடப்பு நிதியாண்டில் இந்தியா 40ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்ய முடிந்தது,இலக்கை அடைய முடிந்தது. இந்திய மக்களின் வலிமையை, சக்தியை நினைத்தும், உலகின் ஒவ்வொருமூலையிலும் இந்தியப்பொருட்களுக்கான சந்தை திறக்கப்பட்டிருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு
ஒவ்வொரு இந்தியரும் உள்நாட்டில் தயாராகும் பொருட்களுக்கு ஆதரவு கொடுக்கும் போது, நம்முடைய தயாரிப்புகள் உலகளவில் சென்று சேர்வதற்கு நீண்டகாலம்ஆகாது. உள்நாட்டு தயாரிப்புகளை உலகளவில் உயர்த்துவோம், இந்தியப் பொருட்களின் பெருமைப்படுத்துவோம்.
இந்தியா நடப்பு நிதியாண்டில் 40ஆயிரம் கோடி டாலருக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது, அதாவதுஏறக்குறைய 30 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியை முதல்முறையாக எட்டியுள்ளது.இது இந்தியாவின் ஆற்றலோடு தொடர்புடையஅம்சமாகும்.

இதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது, இந்தியாவின் சப்ளை நாளுக்கு நாள் வலிமையடைந்து வருகிறது. கனவுகளைவிட தீர்மானம் பெரிதாக இருக்கும்போது, தேசயம் வளர்ச்சிப்பாதையில் செல்லும், தீர்மானத்தை நோக்கிய இரவுபகல்பாராது உழைப்பு இதை அடைய வைத்துள்ளது.
இந்தியப் பொருட்களுக்கான சந்தை
ஏராளமான புதிய பொருட்கள் வெளிநாடுகளைச் சென்றடைந்துள்ளன. அசாமின் ஹெய்லாகன்ட் பகுதியிலிருந்து தோல் பொருட்கள், ஓஸ்மானாபாத்திலிருந்து கைத்தறிப் பொருட்கள், பிஜப்பூரிலிருந்து காய்கறிகள்,பழங்கள், சாந்தவுளியிலிருந்து கருப்பு அரசி ஆகியவற்றுக்கு சந்தை கிடைத்துள்ளது.லடாக்கில் விளையும் புகழ்பெற்ற ஆப்ரிகாட் துபாய்க்கும், சவுதி அரேபியாவுக்கும் ஏற்றுமதியாகிறது. தமிழகத்திலிருந்து வாழைப்பழங்கள் ஏற்றுமதியாகின்றன. மிக முக்கியமாக, புதிய பொருட்கள், புதிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

தேசம் மாறி வருகிறது
கடந்த ஓர் ஆண்டாக மின்னணு சந்தைப்படுத்தும் போர்டல் மூலம் மத்திய அ ரசு ஒரு லட்சம் கோடிக்கும் மேலான பொருட்களை கொள்முதல் செய்துள்ளது. 1.25 லட்சம் சிறிய தொழில்முனைவோர்கள்,கடைக்காரர்கள் நாட்டில் ஒவ்வொரு மூலையிலிருந்தும் தங்கள் பொருட்களை அரசுக்கு விற்பனை செய்துள்ளனர்.
பெரிய நிறுவனங்கள் மட்டுமே அரசுக்கு விற்கமுடியும் என்றசூழல் இருந்தது. இப்போது தேசம் மாறிவருகிறது, பழைய முறைகள் மாறிவருகின்றன. சிறிய கடைக்காரர்கள் கூட தங்கள் பொருட்களை இ-போர்டல் வாயிலாக விற்கலாம் இதுதான் புதிய இந்தியா”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்
நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி 37 சதவீதம் அதிகரித்து 40ஆயிரம் கோடி டாலரை எட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 29200 கோடி டாலராகத்தான் இருந்தது. முதல்முறையாக இந்தியாவின் ஏற்றுமதி 40ஆயிரம் கோடி டாலரை எட்டியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 2018-19ம் ஆண்டில் 33000 கோடி டாலர் ஏற்றுமதியை எட்டியிருந்தது.
