திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ ஷாப்பிங் மாலில் நள்ளிரவு ஷாப்பிங் நடத்தப்பட்ட நிலையில் ஷாப்பிங் மால் திணறும் அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டது.

திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ ஷாப்பிங் மாலில் நள்ளிரவு ஷாப்பிங் நடத்தப்பட்ட நிலையில் ஷாப்பிங் மால் திணறும் அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டது.

Scroll to load tweet…

தமிழகத்தில் தூங்கா நகரம் என மதுரையை அழைப்பதுபோல் கேரளாவில் திருவனந்தபுரமும் கலாச்சாரம் மையமாக இருப்பதால், எப்போதும் ஏதாவதுஒருபகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ சர்வதேச ஷாப்பிங் மாலில் நள்ளிரவு ஷாப்பிங் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி காலை 6மணிவரை ஷாப்பிங் நடத்தப்பட்டது. பரிசோதனை முறையில் கடந்த 6ம் தேதி நள்ளிரவு ஷாப்பிங் நடந்தது. 

Scroll to load tweet…

ஏற்கெனவே பெங்களூரு, கொல்கத்தா, மும்பையில் நள்ளிரவு ஷாப்பங்கிற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் திருவனந்தபுரத்திலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், படிப்படியாக நள்ளிரவு ஷாப்பிங்கை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இரவு நேர வாழ்க்கையையும், வியாபாரத்தையும் செயல்பாட்டில் வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

லூலூ குழுமத்தின் மண்டல இயக்குநர் ஜோய் சதானந்தன் கூறுகையில் “ எங்களின் முக்கிய நோக்கம் மக்களுக்கு நள்ளிரவு ஷாப்பிங்கை ஊக்ககப்படுத்த வேண்டும், தினசரித் தேவையை அமைதியாக வாங்கிச் செல்ல வேண்டும். இதற்காக ஒருநாள் பரிசோதனை முயற்சியில் நடத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.

Scroll to load tweet…

இதன்படி 6ம்தேதி நள்ளிரவு 11.59க்கு ஷாப்பிங் மால் திறக்கப்பட்டு, 7ம்தேதி காலை 6மணிக்கு அடைக்கப்பட்டது. ஆனால் ஷாங்பிங்கிற்கு வரவேற்பு இருக்குமா என எதிர்பார்த்த கடைக்காரர்கள் திணறும் அளவுக்கு, சமாளிக்கமுடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்தது. 

இந்த நள்ளிரவு ஷாப்பிங்கில் லூலூ கடைகள் மட்டுமல்லாது அனைத்து சில்லரைக் கடைகளிலும் 500க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு 50% தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட மக்கள் லூலூ மாலுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர். 

Scroll to load tweet…

ஷாப்பிங் மாலின் படிக்கட்டுகள், நடைபாதைகள், கடைகள், என அனைத்திலும் விலக முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது. லூலூ ஷாப்பிங் மாலில் கூடிய மக்கள் கூட்டம் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் பலரும் பதிவிட்ட வீடியோ டிரண்டாகி வருகிறது