எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் தனது ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது.

எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் தோற்றம் சமீபத்தில் ஏற்கனவே செய்யப்பட்ட எம்.ஜி. ஆஸ்டர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் அதிநவீன டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. தொடுதிரை வசதியுடன் அளவில் பெரிய டிஸ்ப்ளே, ஏ.ஐ. அசிஸ்டண்ட், ADAS, 360 டிகிரி கேமரா மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதில் முந்தைய மாடலை விட பெரிய பேட்டரி பேக் வழங்கப்படுகிறது.

எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் ZS EV மாடலின் ஐ.சி.இ. வேரியண்டாக ஆஸ்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் அறிமுகமான ஆஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் புகைப்படங்களும், முந்தைய ஸ்பை படங்களில் இருந்த காரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி காட்சியளிக்கின்றன.

எம்.ஜி. ZS EV ஸ்டைலிங் பார்க்க சர்வதேச மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் காரின் தோற்றத்தை மாற்றி இருக்கின்றன. இருபுறங்களில் உள்ள லைட்டிங் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. 

அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் பானரோமிக் சன்ரூஃப், பவர்டு டிரைவர் சீட், ஆட்டோமேடிக் ஹெட்லைட், வைப்பர்கள், கனெக்டெட் கார் அம்சங்கள், ஆறு ஏர்பேக், ஹில் ஸ்டார்ட்/டிசெண்ட் கண்ட்ரோல், டிஸ்க் பிரேக் செட்டப், டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி Kண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

புதிய எம்.ஜி. ZS EV மாடலில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் சுமார் 600-க்கும் அதிக கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய ZS EV மாடல் விலை இந்தியாவில் ரூ. 21.49 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 25.18 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரும் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.