பொருளாதார மந்தநிலை, மக்கள் மத்தியில் பணப்புழக்கம் குறைந்தது போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த 2019ம் ஆண்டு கார் உள்ளிட்ட வாகனங்கள் விற்பனை மிகவும் மோசகமாக இருந்தது.

குறிப்பாக கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிகவும் கசப்பான ஆண்டாக அமைந்தது. விற்பனை குறைந்ததால் கையிருப்பு அதிகரித்தது, இதனையடுத்து உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகளில் கார் நிறுவனங்கள் இறங்கின. மேலும் பல முன்னணி நிறுவனங்கள் வேலையில்லா நாட்களையும் அறிவித்தன.

2020ம் ஆண்டில் வாகன விற்பனை சூடுபிடிக்கும் என்று வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தன. ஆனாலும் விற்பனை வளர்ச்சிக்கான அறிகுறிகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.

உதாரணமாக மாருதி சுசுகி உள்ளிட்ட சில முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை சரிவே சந்தித்தது. இதனால் வாகன நிறுவனங்கள் மறுபடியும் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1.40 லட்சம் வாகனங்களை மட்டுமே தயாரித்துள்ளது. இது 2019 பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் 5.38 சதவீதம் குறைவாகும் அந்த மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் மொத்தம் 1.48 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

 மாருதி சுசுகி நிறுவனம் குறிப்பாக பயணிகள் வாகனங்கள் தயாரிப்பை 4.87 சதவீதம் குறைத்து 1.40 லட்சம் வாகனங்களை மட்டுமே சென்ற மாதம் உற்பத்தி செய்து இருந்தது.