மாருதி சுசுகி நிறுவனம் ஒரே ஆண்டில் 2.6 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து சாதனை புரிந்துள்ளது.

இந்தியாவில் முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் சென்ற 2022ஆம் ஆண்டில் மட்டும் 2.6 லட்சம் வாகனங்கள் பல நாடுகளுக்கு ஏற்றபதி செய்யப்பட்டுள்ளன எனக் கூறியிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யும் இலக்கை எட்டியுள்ளது.

2021ஆம் ஆண்டில் 2,05,450 வாகனங்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி நிறுவனம் 2022ஆம் ஆண்டில் 2,63,068 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது 28 சதவீதம் வளர்ச்சி ஆகும்.

உலகில் மூன்றில் ஒருபகுதி நாடுகள் 2023-ல் பொருளாதார மந்தநிலையைச் சந்திக்கும்: ஐஎம்எப் எச்சரிக்கை

2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்றினால் ஆட்டோமொபைல் துறை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்த ஆண்டைவிட இருமடங்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

ஆண்டுவாகன ஏற்றுமதி எண்ணிக்கை
20222,63,068
20212,05,450
202085,208
20191,07,190
20181,13,874

1986-87ல் தொடங்கி மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகனங்கள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. முதன்முதலில் ஹங்கேரிக்கு ஏற்றமதி செய்யப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட நூறு நாடுகளுக்கு தனது வாகன ஏற்றுமதியை விரிவு செய்துள்ளது.

ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் மாருதி சுசுகியின் வாகனங்களுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது என்று அந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.