மஹசூஸ் லைவ் டிராவில் AED 100,000 என்ற பெரும் தொகையை வென்ற தமிழகத்தை சேர்ந்த ஹமீத் அன்சாரி, ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
மஹசூஸ் லைவ் டிராவில் இந்தியர்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுவருகின்றனர். மஹசூஸ் டிராவில் www.mahzooz.ae என்ற இணையதளத்தில் AED 35 செலுத்தி பதிவு செய்து போட்டியாளர்கள் விளையாடினர்.
அதில் தமிழ்நாட்டில் திருவாரூரை சேர்ந்த ஹமீத் அன்சாரி AED 100,000 வென்றுள்ளார். ஷார்ஜாவில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பைக் மெசேஞ்சராக பணியாற்றிவரும் ஹமீத் அன்சாரி, ஷார்ஜாவில் இருக்கும் ஹமீத் அன்சாரி, தொடர்ச்சியாக மஹசூஸ் லைவ் டிராவில் விளையாடி வந்தநிலையில், இப்போது பெரும் தொகையை வென்றுள்ளார்.
26 வயதான ஹமீத் அன்சாரி திருமணமானவர். ஆனால் குழந்தை இல்லை. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர். ஷார்ஜாவில் பணியாற்றிவரும் ஹமீத் அன்சாரி, அவரது நண்பருடன் ஹமீத் அன்சாரிக்கு சொந்த ஊரில் சொந்த வீடு இல்லை. எனவே சொந்த வீடு கட்டுவதை நோக்கமாக கொண்ட ஹமீத் அன்சாரி, மஹசூஸ் லைவ் டிராவில் அவரது நண்பருடன் இணைந்து தொடர்ந்து விளையாடி வந்தார். ஒரு வாரம் ஹமீத் அன்சாரியும், மறுவாரம் அவரது நண்பரும் விளையாடியிருக்கின்றனர். அதில் ஹமீத் அன்சாரி ஆடிய வாரத்தில் அவர் வெற்றி பெற்றார்.
AED 100,000 வென்ற ஹமீத் அன்சாரி, வெற்றி குறித்து ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்திடம் பேசினார். அப்போது பேசிய ஹமீத் அன்சாரி, நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்று என் நண்பர் என்னிடம் சொன்னபோது நான் அதை நம்பவில்லை. பின்புதான் நான் உண்மையாகவே வென்றிருக்கிறேன் என்பது தெரிந்தது. மஹசூஸ் டிராவில் வெற்றி பெற்ற தொகையை வைத்து என் ஊரில் சொந்த வீடு கட்டவுள்ளேன். சில கடன்கள் இருக்கின்றன. அவற்றையும் இந்த தொகையை வைத்து அடைக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.
