மஹசூஸ் லைவ் டிராவின் 64வது வாரத்தில், அபுதாபியில் வசித்துவரும் இந்தியரான 42 வயது வெங்கடேசன் AED 100,000 வென்றுள்ளார்.
மஹசூஸ் லைவ் டிராவில் இந்தியர்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுவருகின்றனர். மஹசூஸ் டிராவின் 64வது வாரத்திற்கான போட்டியில் www.mahzooz.ae என்ற இணையதளத்தில் AED 35 செலுத்தி பதிவு செய்து போட்டியாளர்கள் விளையாடினர்.
அதில் வெங்கடேசன் AED 100,000 வென்றுள்ளார். ஐடி ஊழியரான வெங்கடேசன், வருவாய் ஈட்டுவதற்காக, மனைவி மற்றும் 2 குழந்தைகளை பிரிந்து அபுதாபியில் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் தான் மஹசூஸ் லைவ் டிராவில் இந்த பெரும் தொகையை ஜெயித்துள்ளார்.
இந்த தொகையை ஜெயித்ததன் மூலம், நீண்டகாலமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை அபுதாபிக்கு அழைத்துச்செல்ல விரும்பிய வெங்கடேசனுக்கு பொருளாதார பிரச்னையால் அது சாத்தியப்படாமல் போன நிலையில், இப்போது மஹசூஸ் வெற்றி பணத்தின் மூலம் அது சாத்தியமாகியிருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மஹசூஸ் லைவ் டிராவில் வெற்றி பெற்றது குறித்து பேசிய வெங்கடேசன், நான் AED 100,000 என்ற தொகையை வென்றதாக மெயில் வந்தபோது, அதில் இருந்த ஜீரோக்கள் எத்தனை என்பதை எண்ணி எண்ணி வியந்தேன். என் மனைவி மற்றும் குழந்தைகளை அமீரகத்திற்கு அழைத்துவந்து சுற்றிக்காட்ட வேண்டும் என நீண்டகாலமாக நினைத்து கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கான பொருளாதார வசதி இல்லாததால் அது முடியாமல் போனது.
இப்போது அதை சாத்தியமாக்கியதற்காக மஹசூஸுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது என்னால் என் குடும்பத்தை அமீரகத்திற்கு அழைத்துவந்து அவர்களுடன் சேர்ந்து என்னால் மகிழமுடியும்.
என் 2 குழந்தைகளின் எதிர்காலமே எனக்கு முக்கியம். அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், அவர்களை பிரிந்து அபுதாபியில் தனியாக இருந்து பணிபுரிந்துவருகிறேன். அவர்களை பார்த்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இவ்வளவு பெரிய தொகையை ஜெயிப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து மகிழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது மஹசூஸ் லைவ் டிரா.
இதற்கு முன்பாக லக்கி டிராக்களை நான் பெரிதாக நம்பியதில்லை. ஆனால் இனிமேல் மஹசூஸ் லைவ் டிராவை எனக்கு தெரிந்தவர்களிடம் விளையாடுமாறு பரிந்துரைப்பேன். அடுத்த முறை எங்களில் ஒருவர் AED 10,000,000 என்ற தொகையை வெல்வோம் என வெங்கடேசன் நம்பிக்கை தெரிவித்தார்.
AED 10,000,000 வெல்வதற்கான இந்த வாரத்திற்கான மஹசூஸ் டிரா ஒவ்வொரு சனிக்கிழமையும் அமீரக நேரப்படி இரவு 9 மணிக்கு நடக்கிறது. வெற்றியாளர் AED 10,000,000 ஜெயிக்கலாம். www.mahzooz.ae என்ற இணையதளத்தில் AED 35 செலுத்தி பதிவு செய்து விளையாடலாம்.
